பாண்டியனை பழிவாங்க சக்தி அப்பாவிடம் கைக்கோர்த்த சுகன்யா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பழனியின் அண்ணன்களுக்கும் பாண்டியனுக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது பாண்டியனின் மகன்களும் அங்கு வந்து சண்டை போட்டார்கள். இருவருக்கும் இடையே அடிதடி அளவிற்கு சண்டை நடந்தது. இதையெல்லாம் உள்ளே நின்று கேட்ட பழனி கோபத்தில் தன் அண்ணன்களை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். பின் கோபத்தில் வீட்டிற்கு வந்த பழனி, துணிகளை எல்லாம் பேக் செய்து சுகன்யாவுடன் வீட்டை விட்டு கிளம்பி இருந்தார். அந்த சமயம் பார்த்து அவருடைய அண்ணன்களும் வந்து விட்டார்கள். அவர்களுமே தாங்கள் செய்த தவறை ஒத்து கொண்டார்கள்.
இதனால் அப்பத்தா ரொம்பவே கோபப்பட்டு தன்னுடைய மகன்களை திட்டி இருந்தார். பின் பழனி, பாண்டியன் வீட்டிற்கு வந்தார். பழனி, சுகன்யா வந்தது நினைத்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அவர்களுக்காக தடபுடலாக சமையலும் செய்தார். அதன் பின் வேலையில் இருந்து எல்லோரும் வந்தார்கள். பழனிக்காக சுகன்யா வெளியில் காத்திருந்தார். அப்போது வந்த பழனி இடம் சுகன்யா, நமக்கு ஒரு ரூம் கூட இல்லை. இந்த வீடு ரொம்ப சின்னதாக இருக்கிறது. நாம் அங்கேயே சென்று விடலாம் என்று சொன்னார். அதற்கு பழனி, வேணாம் இங்கே இருக்கலாம் என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்கு பின் பாண்டியன், தங்களின் ரூமை பழனிக்கு கொடுத்து விட்டார்கள். நேற்று எபிசோட்டில் பழனி- சுகன்யா இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ரூம் ரொம்ப சின்னதாக இருக்கிறது. எல்லோருக்கும் என்னால் சமைத்து கொட்ட முடியாது. நான் அடிக்கடி என்னுடைய அக்கா வீட்டுக்கு போவேன். என்னை வெளியில் கூட்டிட்டு போக வேண்டும். நான் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று பயங்கரமாக ஆர்டர் போட்டார்.
நேற்று எபிசோட்:
இது எல்லாம் பார்த்து பழனி ரொம்பவே ஷாக் ஆகி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் சுகன்யா, பாண்டியன் வீட்டு ஆட்கள் முன்பு நல்லவள் போல வேஷம் போட்டு வீட்டு வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால், பழனி தான் உள்ளுக்குள் பயப்பட்டார். அந்த சமயம் பார்த்து மீனாவிற்கு அவருடைய அம்மா போன் செய்து, அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்து விட்டது. ஹாஸ்பிடல் இருக்கிறோம் என்று சொன்னார். இதனால் மீனா ரொம்பவே பதறி போய் ஹாஸ்பிடலுக்கு போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பாவிற்குசின்ன ஆபரேஷன் செய்தால் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனுக்கு போன் செய்த செந்தில், மீனாவின் அப்பா நலமாக இருப்பதை சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று தங்கமயில் வேலைக்கு போவதை முடக்கு போடுகிறார். உடனே பாண்டியன், நீ வேலைக்கு கிளம்பு. இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று சொல்கிறார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது செய்வதென்றே புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் அரசி, கல்லூரிக்கு போகும்போது யாருக்கும் தெரியாமல் சக்திக்கு பாய் சொல்லிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் சுகன்யா பார்த்துவிட்டு சக்தியின் அப்பாவிடம் பேசுகிறார். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்தார்கள். அப்போது சுகன்யா, பாண்டியனை பழிவாங்க நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அவர்கள் இருவருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் ஹாஸ்பிடலில் மீனாவின் அப்பா கண்விழித்து விடுகிறார். அப்போது செந்தில், மீனாவின் அப்பாவிடம் பேசுகிறார். அவர் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.