கதிர் செய்த வேலையால் பாண்டியன் வீட்டில் பூகம்பம், தவித்து நிற்கும் கோமதியின் அம்மா- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Arun · 28/7/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் எதுவுமே மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். பின் ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டம் கைக்கூடியது. ஒருவழியாக ஹனிமூன் போக பாண்டியன் ஒத்து கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம், செந்தில் தன்னுடைய மனைவிக்காக மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். இதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். கதிர் எப்படியாவது வீட்டில் சொன்னபடி பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்ல முடிவெடுக்கிறார். இதை அறிந்த ராஜு ரொம்பவே வருத்தப்படுகிறார். நேற்று எபிசோடில் ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க கோமதி கேட்கிறார். அதற்கு பாண்டியன் மறுக்கிறார்.

நேற்று எபிசோட்:

இதனால் கோமதி பயங்கரமாக சண்டை போடுகிறார். இறுதியில் பாண்டியன் குழம்பி போய் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில், கதிர் தூங்காமல் இரவில் போய் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதை நினைத்து கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு பேசுகிறார். கடைசியில் வீட்டில் கலவரமே வெடிக்கிறது. கோமதி- பாண்டியன் இருவருமே கதிரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் பாண்டியன், கதிரை தீட்டி விட்டு சென்று விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

மறுநாள் காலையிலும் கோமதி கோபமாகவே இருக்கிறார். ஒரு வழியாக பாண்டியன், என்னோட கடைக்கு வந்து வேலை செய்ய சொல்லு. அதற்கான சம்பளத்தை தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அந்த சமயம் பார்த்து கதிர் வீட்டிற்கு வருகிறார். கதிரிடம் நடந்ததை எடுத்து சொன்னவுடன் அவர் முடியாது. இவர் வர சொல்லும் போது வரணும், போ சொல்லும் போது போகணுமா? என்னால் முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், கதிரை பயங்கரமாக திட்டிவிட்டு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா கேட்டு அழுகிறார். நான் சாவதற்குள் என் மகளிடம் பேச வேண்டும். அதற்கு முடியாதா? என்று புலம்பி அழுகிறார். உடனே அவருடைய கடைசி மகன் அழைக்க , அந்த சமயத்தில் வந்த அவருடைய மற்ற இரண்டு மகன்கள் திட்டி அவரை இழுத்து வெளியே தள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் பாண்டியன், கோமதி பார்த்து கவலைப்படுகிறார்கள். கடைசியில் பஞ்சாயத்து முடிந்து அவருடைய அம்மாவை அவர்களுடைய மகன்கள் கூட்டிக் கொண்டு போகிறார்கள். உண்மையை அறிந்த கோமதி தன்னுடைய அம்மாவை நினைத்து அழுகிறார். இனிவரும் நாட்களில் கோமதி தன்னுடைய அம்மாவிடம் பேசுவாரா? கதிர் கடைக்கு செல்வாரா? பாண்டியன் என்ன முடிவெடுக்கப் போகிறார்? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full