பாண்டியன் வீட்டில் வெடிக்கும் சண்டை, தவிக்கும் கோமதி அம்மா, கோபத்தின் உச்சத்தில் அண்ணன்கள்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By Siva · 26/7/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார்.

பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் எதுவுமே மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். கடந்த வாரம், தங்கமயில், தன்னுடைய கணவர் எதையும் கண்டு கொள்ளவில்லை என்று டிராமா செய்து அவரை தன் பக்கம் இழுக்க பார்க்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

சரவணனும், நான் என்ன செய்தால் நம்புவாய் என்று கேட்பதற்கு ஹனிமூன் கூட்டிட்டு போங்க என்று தங்கமயில் சொல்கிறார். சரவணனும் எப்படியாவது வீட்டில் பேச வேண்டும் என்று நினைக்கிறார். இதற்கிடையில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்த் விலகி தற்போது வெங்கட் நடித்து வருகிறார். மீனா தன்னுடைய அப்பாவிற்காக கை கடிகாரத்தை கிஃப்ட் ஆக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் மீனாவின் அப்பா திட்டி அனுப்பி விடுகிறார். பின் செந்தில், தன்னுடைய மனைவிக்காக மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். இதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள், தங்கமயில் அம்மா வந்து ஹனிமூன் போவது குறித்து பேசுகிறார்கள்.

சீரியல் கதை:

உடனே பாண்டியனும் சம்மதிக்கிறார். நேற்றைய எபிசோடில், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்னபடி பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் என்று பார்க்காமல் விடுமுறை நாட்களிலும் கார் ஓட்ட செல்ல முடிவெடுக்கிறார். இதை அறிந்த ராஜு ரொம்பவே வருத்தப்படுகிறார். ஹனிமூன் போவது பற்றி பாண்டியன் வீட்டில் எல்லோரிடம் பேசி சரவணனை போக சொல்கிறார். ஆனால், சரவணனுக்கு மனம் இல்லை. இதற்கு சரவணனுடன் மற்ற இரண்டு பேரையுமே சேர்த்து அனுப்பி வையுங்கள் என்று பாண்டியன் மச்சான் சொல்கிறார். இதைக்கேட்ட பாண்டியன், சரவணன் என் பேச்சை கேட்கிறான். மற்றவர்கள் என் பேச்சை கேட்பது இல்லை.

இன்றைய எபிசோட்:

அவர்கள் எல்லாம் அனுப்பி வைக்க முடியாது என்று கோபமாக திட்டிவிட்டு சென்று விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோமதியிடம் அவருடைய தம்பி ரொம்ப வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார். எப்படியாவது இதை சரி செய்ய வேண்டும் என்று கோமதி நினைக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் நடந்ததை எல்லாம் தன் அம்மாவிடம் சொல்கிறார். உடனே அவர், உன்னுடைய கணவனை கைக்குள் போட்டு வை, அவருடைய தம்பிகள் ஞாபகமே வராத அளவுக்கு பார்த்துக் கொள் என்று ஏத்தி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

https://youtu.be/X-baIlJmBr4?si=XLC22PZICBug3srZ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புது ப்ரோமோவில், ஹனிமூன் செல்லும் விஷயமாக கோமதி- பாண்டியன் இடையே பயங்கரமாக சண்டை நடக்கிறது. இதை எதிரில் இருக்கும் அவர் அம்மா கேட்டு ரொம்ப வருத்தப்படுகிறார். பின் தன்னுடைய மகளை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த அவருடைய மகன்கள், உனக்கு மகள் பாசம் அதிகமாகி விட்டதா? அப்போது நீ உன் மகளிடமே போ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். இதை கோமதியும், அவருடைய கணவன் பாண்டியனும் பார்க்கிறார்கள். இனி வரும் நாட்களில் கோமதி தன்னுடைய அம்மாவை ஏற்றுக் கொள்வாரா? இதனால் இரு குடும்பத்திற்கும் இடையில் கலவரம் வெடிக்குமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டு இருக்கின்றது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full