பாண்டியன் எடுத்த முடிவால் கோபப்படும் தங்கமயில், சரவணன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி நன்றாக குறட்டை விட்டுக்கொண்டு தூங்கியிருந்தார். சுகன்யா, தன்னுடைய முதல் கணவரை பார்த்ததால் ரொம்பவே பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்து பழனி, சுகன்யாவை சமாதானம் செய்து தூங்க வைத்தார். மறுநாள் காலையில் ப்ராக்டிஸ் செய்வதற்காக கதிர்- ராஜி இருவருமே கிரவுண்டுக்கு சென்றிருந்தார்கள். கதிர் திட்டியதால் ராஜி கோபத்தில் தான் இருந்தார். கதிர் சொல்வதையெல்லாம் ஒழுங்காகவே கேட்கவில்லை.

இதை பார்த்த கதிர், நீ எனக்காக கஷ்டப்பட வேண்டாம். அதற்காகத்தான் நான் சொன்னேன். நீ உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. உன்னால் முடியும், நீ சீக்கிரம் டிராவல்ஸ் ஆரம்பிப்பாய் என்று எனக்கு என்கரேஜ் பண்ணு. அதுவே போதும் என்றெல்லாம் சொல்வதால் ராஜி அமைதியாகினார். இன்னொரு பக்கம் செந்தில், தன்னுடைய முதல் மாத சம்பளத்தில் என்னெல்லாம் வாங்கலாம் என்று லிஸ்ட் போட்டு வைத்திருந்தார். அதை பார்த்த மீனா சந்தோஷப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கிச்சனில் கோமதி, தங்கமயில், சுகன்யா மூவருமே சமைத்துக் கொண்டிருந்தார்கள். மீனா வேலைக்கு நேரம் ஆகிறது என்று கிளம்புவதால் சுகன்யா வழக்கம் போல் வம்பு இழுத்து மீனாவை பேசி இருந்தார். இதனால் மீனாவும் பதிலடி கொடுத்தார். அதற்குப்பின் பாண்டியன் கீழே விழுந்ததால் அவருக்கு அடிபட்டு இருந்தது. இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். அந்த சமயம் பார்த்து வந்த மீனாவின் அப்பா, அம்மா, மாப்பிள்ளைக்கு வேலை கிடைத்ததால் குலதெய்வ கோயிலுக்கு போகணும் என்று சொன்னார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது சுகன்யா, செந்திலுக்கு மீனா தான் லோன் போட்டு பணம் தந்தார் என்பதை சொன்னார். இதைக் கேட்டு மீனாவின் அப்பா, அம்மா இருவரும் கோபித்து கொண்டு சென்றார்கள். இதனால் கோமதி, சுகன்யாவை திட்டினார். பின் கோபத்தில் மீனா, சுகன்யாவை பார்த்து என் விஷயத்தில் நீங்கள் தலையிட தேவையில்லை. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் ராஜி, குமாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராஜி, கதிர் பற்றியும் கதிர் தனக்காக செய்வது எல்லாம் சொன்னார். இதனால் குமார் மனம் மாறுவது போல காண்பித்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், சுகன்யா பேசியது தவறு என்பது போல சொல்கிறார். உடனே சுகன்யா, நான் எதார்த்தமாகத்தான் சொன்னேன் என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் ராஜி, குமாரை சந்தித்து பேசி விஷயத்தை சொல்கிறார். ஆனால், அரசி இதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
பின் குமார், அரசியிடம் மன்னிப்பு கேட்ட விஷயத்தை சொல்லாமல் ராஜி மறைக்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நமக்கு சொந்தமான வயலை விற்று மீனா வாங்கிய கடனையும், கதிர் டிராவல்ஸ் வைப்பதற்கும் பணத்தை இரண்டாக பங்கிட்டு கொடுக்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட உடன் தங்கமயில் முகம் மாறுகிறது.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பா அம்மாவை பார்த்து பேசுகிறார். அப்போது மீனாவின் அம்மா, இவ்வளவு நடந்தும் எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. உனக்கு அந்த வீடுதான் பெருசா என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு மீனா, செந்திலை இந்த மாதிரி கட்டாயப்படுத்தி பணம் வாங்க வைத்தது அப்பா தான். அவர் யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அதை சமாளிக்க லோன் வாங்கினேன் என்று நடந்ததை சொல்கிறார். அதற்குப்பின் ரூமில் தங்கமயில், அந்த வயல் சொத்து ஐந்து பேருக்கும் சமம். அதை எப்படி ரெண்டு பங்காக போட முடியும்? நீங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். உடனே கோபத்தில் சரவணன், அது எங்களுடைய அப்பாவும் கஷ்டப்பட்டு வாங்கியது. அது யாருக்கு கொடுக்கணும், எப்போ கொடுக்கணும் என்று அவருக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என்று திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full