தங்கமயில் பிறந்தநாள் கொண்டாட்டம், கோபத்தில் பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 28/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயிலின் அப்பாவை ராஜியின் அப்பா, சித்தப்பா இருவரும் கட்டி வைத்து விஷயம் அறிந்த பாண்டியன் வீட்டார் சண்டைக்கு போனார்கள். ராஜி அப்பா, அவர் எதற்கு இங்கு வந்தார்? என்ற உண்மை தெரியும் வரை விடமாட்டோம் என்றார்கள். உடனே அங்கு வந்த தங்கமயில் அம்மா, தங்கமயில் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக வாழ்த்து சொல்லத்தான் வந்தார் என்றார். ஆனால், ராஜியின் அப்பா- சித்தப்பா இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவழியாக அங்கு வந்த போலீஸ் பஞ்சாயத்தை முடித்து விட்டது.

பின் எல்லோரும் தங்கமயிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசு தந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன், வேலைக்கு வர சொல்லிவிட்டார்கள். சர்டிபிகேட் எங்கே? என்று கேட்க, தங்க மயிலால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவருடைய அம்மா, சர்டிபிகேட் தொலைந்து விட்டது என்று புது கதை ஒன்று சொன்னார். இருந்தும் விடாமல் பாண்டியன், தங்கமயிலை வேலைக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி இருந்தார். அதற்கு பின் மீனா, அத்தை இடம் என்ன சொன்னீர்கள்? எதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள்? என்று கேட்க, செந்தில் தன் மனதில் இருந்த ஆதங்கத்தை சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் சரவணன், தங்கமயிலை வேலைக்கு அழைத்து போனார். அங்கு சர்டிபிகேட் இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. நீங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல, தங்கமயில் பயத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் இருந்தார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பழனிக்கு திருமணத்தை செய்து வைக்க வேண்டும் என்று புலம்ப, கோமதியும் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம் என்றார். நேற்று எபிசோட்டில் கோமதி, நீங்கள் செலவிற்கு பழனிக்கும், செந்திலுக்கு பணம் கொடுங்கள் என்று சொல்ல, பாண்டியனும் சரி என்றார்.

நேற்று எபிசோட்:

பின் கடையில் பாண்டியன், இருவரும் தினமும் 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். வேற ஏதாவது செலவுக்கு வேண்டுமென்றாலும் சொல்லிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்றவுடன் செந்திலுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இதனால் செந்தில் தன்னுடைய அப்பாவிடம் சொல்லாமல் கல்லாவிலிருந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு பொய் கணக்கு எழுதி வைத்தார். இதை பார்த்த பழனி ஷாக் ஆகி இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, வேலை செய்யும் இடத்திற்கு வந்த ராஜியின் சித்தப்பா, சக்தி இருவரும் ஆக்கிரமிப்பு இடம் சம்பந்தமாக தகராறு செய்தார்கள். அதற்கு மீனா, பதிலடி கொடுத்து இருந்தார்.

இன்றைய எபிசோட்:

கோபத்தில் அவர்கள் மீனாவிடம் சண்டை போட்டு மிரட்டி விட்டு சென்றார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், மீனாவிற்காக ஹேண்ட் பேக்கை பார்த்து பார்த்து ஆசை ஆசையாக வாங்குகிறார். ஆனால், அதனுடைய விலை அதிகமாக இருந்தால் பழனி இடம் பணம் வாங்கி கொடுத்து விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் திருடன் வர கூடாது என்று சிசிடிவி கேமராவை பாண்டியன் செட் பண்ணுகிறார். அதை பார்த்து ரசித்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். பின் தங்க மயிலின் பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி கொண்டாடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

எல்லோருமே பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சந்தோஷமாக கேக் சாப்பிட்டுக் கொண்டீர்கள். அப்போது பாண்டியன் கேக் விலை தெரிந்து ரொம்ப ஷாக் ஆகி, இதெல்லாம் தேவையா? காசோட அருமை தெரியவில்லை என்று வழக்கம்போல கிளாஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதற்குப்பின் செந்தில், தான் வாங்கின ஹேண்ட் பேக்கை கொடுக்கிறார். அவரும் அதை பார்த்து மீனா ரொம்ப சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், தூங்காமல் கூட சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கேமரா இருட்டாக தெரிகிறது என்று ஒரே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். பின் கேமராவை பொருத்திய நபருக்கு போன் செய்து கண்ட மேணிக்கு கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full