மறைத்த வைத்த ரகசியத்தை போட்டு உடைத்த தங்கமயில், அதிர்ச்சியில் மீனா, ராஜி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 25/11/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தாலி பிரித்து கோர்ப்பது பற்றி தங்கமயில் அப்பா- அம்மா பேச. பாண்டியன் மூன்று மருமகள்களுக்கும் செய்ய சம்மதித்தார். அதன் பின் அரசி வீட்டிற்கு வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தி, அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் உள்ளே சென்று விட்டார். இதை எல்லாம் கவனித்த ராஜி, தன்னுடைய அண்ணனிடம் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது.

மறுநாள் கோமதி, தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு நகைகளை எடுக்க பேங்கிற்கு போனார். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் தங்கமயில் இருந்தார். இன்னொரு பக்கம் அரசி வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சக்தி அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால், அரசி எதுவுமே பேசவில்லை. உடனே அங்கு வந்த செந்திலை பார்த்தவுடன் சக்தி கிளம்பி விட்டார். பின் பாண்டியன், நியூஸ் பேப்பரில் இருக்கும் சிங்கப்பெண் விஷயத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்ல, எல்லோரும் ஷாக் ஆனார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதோடு அந்த பேப்பரில் ராஜியின் முகம் சரியாக தெரியவில்லை. அவருடைய பெயருமே குறிப்பிடவில்லை.
இருந்தாலும் வீட்டில் உள்ள எல்லோருமே அந்த சிங்கப்பெண் ராஜி தான் என்று கன்பார்ம் செய்தார்கள். ஆனால் ராஜி, அது நான் இல்லை என்று சமாளித்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய நகைகளை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், நான் போலி நகைகளை போட்டு உங்களை ஏமாத்தி இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

நேற்று எபிசோட்:

அதற்கு சரவணன், எனக்கு நகை முக்கியமில்லை, நீதான் முக்கியம் என்றார். ஆனால்,பொய் சொல்லி ஏமாத்துவது தப்பு என்றார். மறுநாள் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று மருமகள்களும் அழகாக ரெடி ஆகி இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், தாலி பிரித்து கொடுக்கும் விழாவிற்கு உறவினர்கள் எல்லோருமே வந்திருக்கிறார்கள். பாண்டியன் வீடு கோலாகலமாக இருக்கிறது. தங்கமயில், நகையை நினைத்து பயங்கரமாக புலம்பி கொண்டு இருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

அப்போது கோமதி, நகைகளை கொண்டு தங்கமயில் இடம் கொடுக்கிறார். உடனே தங்கமயில் அம்மா, ராஜிக்கு கொஞ்சம் நகைகளை எடுத்து கொள்ளுங்கள் என்றார். ஆனால், கோமதி வேண்டாம் என்கிறார். பின் குழலி, எல்லா நகைகளையும் போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன் நகைகளை ராஜிக்கு போட்டு விடுகிறார். இதை பார்த்து கோமதி சந்தோஷப்பட்டார். பின் மாடியில் தங்கமயில், தன்னுடைய அப்பா அம்மாவை கூட்டிட்டு போய் எதற்கு இப்படியெல்லாம் செய்கிறீர்கள்.

சீரியல் ட்ராக்:

அது கவரிங் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது? என்று புலம்பினாள். இதை எல்லாம் இன்னொரு பக்கம் நின்று இருந்த ராஜி- மீனா இருவருமே கேட்டு விடுகிறார்கள். பின் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரிக்க, அவர் அப்பா- அம்மா ஏதோ சொல்லி சமாளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கடைசியில் தங்கமயில், இதெல்லாம் கவரிங் நகை தான், 8 பவுன் தான் தங்கம். இதனால் தான் நான் பயப்படுகிறேன் என்று உண்மையை சொல்ல மீனா- ராஜி இருவருமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full