வேலை கேட்டு நிற்கும் தங்கமயில் அப்பா, பாண்டியன் சொன்ன வார்த்தை - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், எனக்கு வேலை இருக்கிறது வர முடியாது என்று சென்று விட்டார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டார்கள். பின் ட்ராவல்ஸ் திறப்பு விழாவிற்கு எல்லாரும் வந்து விட்டார்கள். பாண்டியன் வருவார் என்ற எதிர்பார்ப்பில் மொத்த குடும்பமும் டிராவல்ஸ் திறப்பு விழாவில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்டில் எல்லோருமே பாண்டியனுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தார். பின் எல்லோருமே கதிர், டிராவல்ஸுக்கு யாருடைய பெயர் வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். ஒவ்வொருவருமே ஒவ்வொரு பேரை சொன்னார்கள். பின் கதிர் டிராவல்ஸ் பெயர் போர்டை திறந்தார். அதில் பாண்டியன் டிராவல்ஸ் என்று பெயர் இருக்கிறது. அதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. சந்தோஷத்தில் பாண்டியன் உறைந்து போய்விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பாண்டியனிடம் கதிர்-ராஜி இருவருமே ஆசீர்வாதம் வாங்கினார்கள். நெகிழ்ச்சியில் பாண்டியன் அங்கிருந்து சொன்னார். கதிருமே தன் அப்பாவின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை கண்டு ரசித்தார். பின் எல்லோருமே பாண்டியன் பெயரை வைத்தது நினைத்து பெருமையாக கதிரை பேசினார்கள்.
பின் பாண்டியன், கடையில் தன் மகன் தன்னுடைய பெயரை வைத்தது நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார். வியாபாரத்தை கூட பார்க்காமல் தனக்குத்தானே பேசி சிரித்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி- கதிர் இருவருமே டிராவல்ஸ் தொடங்கியதை பற்றி ரொம்ப ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிருக்கு முதல் ஆர்டர் கிடைக்கிறது. அதனால் இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் கதிரின் நண்பர் வந்ததால் ராஜியிக்கு பயங்கர கடுப்பு ஆகிறது. இன்னொரு பக்கம் வீட்டில் தங்கமயில் அம்மா, அப்பா, தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்க மயிலின் அப்பா, கதிரிடம் வேலைக்கு போகலாம் என நினைக்கிறேன் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், கதிருக்கு ஆட்கள் வேண்டுமா? என்று தெரியவில்லை.
சீரியல் ட்ராக்:
என்னுடைய மளிகை கடைக்கு வேலை செய்ய ஆள் தேவை. உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் அங்கு வந்து வேலை செய்யுங்கள் என்கிறார். தங்கமயில் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், அவருடைய அம்மா நாளைக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பா, அம்மாவை தனியாக அழைத்து திட்டுகிறார். அதற்கு பின் தங்கமயில் அப்பா, பாண்டியன் கடைக்கு சென்று விசாரிக்கிறார். ஆனால், சரவணனுக்கு அதில் விருப்பமில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது