ஆதார் கார்ட் ரகசியத்தை அறிந்தாரா சரவணன்? மரண பீதியில் தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயந்தார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்பி இருந்தார். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வந்தது. அதற்குப்பின் அம்மா வீட்டிற்கு போன தங்கமயில் நடந்ததை சொல்ல, அவர் ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விட்டார்.

இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறினார். உடனே தங்கமயில், அம்மா, அப்பா எல்லோரும் பாண்டியன் வீட்டுக்கு கிளம்பி இருந்தார்கள். இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோவை மட்டும் தான் பார்த்தார்கள். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் ஆதார் கார்டை பற்றி கேட்க, பத்திரமாக இருக்கிறது என்று கோமதி சொன்னார். யாருக்குமே எந்த விஷயமும் தெரியவில்லை என்று தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைந்தார். மேலும், பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல செந்தில்,சித்தப்பு பயந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் பாண்டியன், கதிர் மீது சந்தேகப்பட்டு திட்டினார். உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்ய, பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் தங்கமயில், செந்தில் இடம் இருக்கும் தன்னுடைய ஆதார் கார்டை வாங்க நினைத்தார். ஆனால், எடுக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. நேற்று எபிசோட்டில் கதிர், செந்தில், சித்தப்பா மூவருமே பாண்டியன் அக்கவுண்டில் எடுத்த பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் வந்த சரவணன், என்ன பணம்? என்று கேட்க, சித்தப்பு உண்மையை சொல்லி விட்டார். உடனே சரவணன் வருத்தப்பட்டு அப்பாவிடம், நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல, கதிர் வேணாம் என்று தடுத்து விட்டார். ஆனால் ரூமில் சரவணன் நடந்ததை நினைத்து கோபப்பட்டு கொண்டு இருக்க, தங்கமயில் ஆதார் கார்டை பற்றி தான் பேசுகிறார் என்று உண்மை தெரியாமல் பயத்தில் புலம்பி இருந்தார். அப்போது செந்தில் தங்கமயிலின் ஆதார் கார்டை கொடுக்க, தங்கமயில் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:

மறுநாள் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சரவணன்- தங்கமயில் உடன் மீனா- செந்திலை போக சொன்னார் பாண்டியன். ஆனால், தங்கமயில் வேண்டாம் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். இந்நிலையில் இன்றைய எபிசொட்டில், சக்திக்கு திருமணம் ஆகவில்லை என்ற கோபத்தில் அவருடைய அப்பா இருக்கிறார். அப்போது சக்தி பேசுவதற்கு அவருடைய அண்ணன் முகம் கொடுத்து பார்த்து பேசவில்லை என்று சக்தி அப்பா கோபப்பட்டார். இதனால் அண்ணன் - தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சக்திக்கு நான் எப்படியாவது திருமணம் செய்து வைக்கிறேன் என்று அண்ணன் செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு தங்கமயில்-சரவணன் உடன் சித்தப்பு-கதிர் போனார்கள். தங்கமயில் ரொம்பவே பதட்டத்திலும், பயத்திலுமே இருக்கிறார். ரெஜிஸ்டர் ஆபீஸில் உண்மை தெரிந்துவிடுமோ என்று தன் அம்மாவிடமே புலம்பி கொண்டிருக்கிறார். ஆனால், நல்லபடியாக சரவணன்- தங்கமயில் கல்யாணம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் தங்கமயில் பெருமூச்சு விட்டு ஆதார் கார்டை தன் கையில் பத்திரமாக மறைத்து வைத்துக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full