தன் அப்பாவை காப்பாற்ற தங்கமயில் உண்மையை சொன்னாரா? பாண்டியன் என்ன செய்தார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர் வேலைக்கு போனதால் பாண்டியன் கோபப்பட்டு பேசி இருந்தார். இதனால் கோமதி-செந்தில் இடையே சண்டை ஆனது. இதற்கு காரணம் மருமகள்கள் தான் கோமதி பேசி இருந்தார். இதனால் மூன்று மருமகள்கள் வருத்தத்தில் இருந்தார்கள். அதன் பின் இருவருக்கும் வாக்குவாதம் ஆகி சமாதானம் ஆனார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் அப்பா, கதவை திறந்து வை. நான் வீட்டுக்குள் வருகிறேன் என்று சொன்னார். பின் அவர் வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயம் பார்த்து பழனி எழுந்தார். தங்கமயில் அப்பாவை திருடன் என நினைத்து பழனி அவரை பிடிக்க, எப்படியோ அவர் தப்பித்து விட்டார்.

உடனே பழனி, திருடன் திருடன் என்று கத்த, வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். பாண்டியன் மற்றும் அவருடைய மகன்கள் வீடு முழுவதுமே சுற்றி தேடி பார்த்தார்கள். ஆனால், யாருமே இல்லை. தங்கமயில் அப்பா, பயந்து கொண்டு ராஜியின் அப்பா வீட்டில் ஒளிந்து கொண்டார். பின் பாண்டியன், வீட்டில் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு ராஜியின் அம்மா, சித்தி எல்லோருமே பயந்து போனார்கள். ராஜியின் அப்பா, சித்தப்பா வெளியில் வந்து பார்த்த போது தங்கமயிலின் அப்பாவை பார்த்து விட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது தங்கமயில் அப்பா, நான் வழி தவறி வந்தேன். மன்னித்து விடுங்கள் என்று அழுது புலம்பி இருந்தார்.
தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு என்ன ஆனது? என்று புரியாமல் தவித்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்டில் ராஜி அப்பா, தங்கமயிலின் அப்பாவை துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால், அவர் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தார் இதையெல்லாம் பார்த்த அப்பத்தா, அவரை விட்டு விடுங்கள் என்று சொல்லியும், அவர்கள் பாண்டியனை அசிங்கப்படுத்த திட்டம் போட்டார்கள்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அப்பாவை பற்றி கேட்க, இன்னும் வரவில்லை என்று சொன்னார். பின் தன்னுடைய கணவரை தேடி அலைந்தார் தங்கமயில் அம்மா. அங்கு வந்த கதிரிடம், தன்னுடைய கணவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றார். பின் கதிர், நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் என்று அவரை வீட்டில் விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜியின் அப்பா வீட்டில் தங்கமயில் அப்பாவை கட்டி போட்டு இருப்பதை கதிர் பார்த்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில் அப்பா கட்டி போட்டு இருக்கும் விஷயம் அறிந்த மொத்த பாண்டியன் குடும்பமே வெளியே வந்து சண்டை போடுகிறார்கள். அதற்கு ராஜியின் அப்பா, சித்தப்பா இருவருமே வாக்குவாதம் செய்கிறார்கள். பின் அவர் எதற்கு இங்கு வந்தார்? என்ற உண்மை தெரியும் வரை விடமாட்டோம் என்று சொல்கிறார்கள். உடனே தங்கமயில், தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கு வரவைத்து விடுகிறார். அவர் வந்தவுடன் எமோஷனலாக அழுது பேசிவிட்டு, தங்கமயில் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக வாழ்த்து சொல்லத்தான் அவர் வந்தார்.

சீரியல் ட்ராக்:

வருடம் வருடம் தங்கமயிலின் பிறந்த நாளை திருவிழா போல கொண்டாடுவர். இந்த வருடம் வாழ்த்து சொல்ல தான் வந்தார் என்று சொல்கிறார். தங்கமயிலும் ஆமாம் என்கிறார். ஆனால், ராஜியின் அப்பா- சித்தப்பா இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாண்டியன், அவரை விட சொல்லி கேட்கிறார். ஆனால், அவர்கள் கேட்கவே இல்லை. கடைசியில் அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. போலீஸ் வந்து விசாரித்தவுடன் நடந்ததை சொன்னார்கள். அத்ற்கு போலீஸ், இது உங்கள் பிற குடும்ப பிரச்சனை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை செல்கிறார். பின் தங்கமயில் அப்பாவை விட்டு விடுகிறார்கள். ஆனால், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாண்டியன் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full