கோமதி, மீனாவின் செயலால் மனம் உடைந்து கதறி அழும் தங்கமயில், ராஜி போட்ட கண்டிஷன்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 21/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஷாப்பிங் போனார்கள். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்பட்டார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை. உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆகி கதிர் இடம் சொல்லி இருவரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது மீனா போனை ஆன் செய்தவுடன் செந்தில் கால் செய்தார். பிறகு மீனா இருக்கும் இடத்திற்கு செந்தில் போனார். இருவரும் மனதை விட்டு பேச ஒரு வழியாக அவர்களுக்கு இடையில் நடந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இந்த வாரம் கதிர் சவாரி போனதை நினைத்து ராஜி - கோமதி ரொம்ப வருத்தப்பட்டு புலம்பி கொண்டிருந்தார்கள். உடனே கோமதி, ராஜி வந்த பின் தான் இந்த ப்ரச்சனை என்று சொல்ல, கோமதி மீனா கோபப்பட்டு ராஜிக்கு ஆதரவாக பேசி இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இருந்தாலும், வேதனையில் ராஜி வருத்தப்பட்டு உள்ளே சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கதிர் வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவை பார்த்து ஆறுதல் சொல்லி இருந்தார். அதற்கு பின்னர் ரூமில் கதிர், ராஜிவிடம் பணத்தை கொடுக்க, எதற்கு நீங்கள் வேலைக்கு போகிறீர்கள்? உங்களால் என்னை தான் அத்தை திட்டுகிறார். நான் உங்களிடம் பணம் கேட்டேனா? என்று இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. நேற்று எபிசோடில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி நான் எல்லா உண்மையும் எங்கள் வீட்டில் சொல்லப்போகிறேன் என்று ராஜி தன்னுடைய அப்பாவை பார்க்க போனார்.

சீரியல் கதை:

மீனா- கதிர் இருவருமே ராஜிவை தடுக்க பார்த்தார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த உண்மையை எல்லாம் மீனா கோமதியிடம் சொல்ல, கோமதியும் என்ன நடக்குமோ? என்ற பயத்தில் இருந்தார். பின் கதிர், ராஜிவை தடுத்து நிறுத்தி எவ்வளவோ சமாதானம் செய்தார். கடைசியில் ராஜி, நான் போடுற கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் வீட்டுக்கு வருவேன். யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சொன்னார். அதற்கு கதிரும் ஒத்துக் கொண்டார். பின் ராஜி, என்னுடைய படிப்பு செலவிற்கு நீ எந்த காசும் கொடுக்க கூடாது.

நேற்று எபிசோட்:

எனக்கு உன்னுடைய பணம் வேண்டாம். நான் டியூஷன் எடுக்க போகிறேன். இதை நான் வீட்டிலும் சொல்லி விடுவேன் என்று சொன்னவுடன் கதிர் சம்மதித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், மீனா-கோமதி இருவருமே ராஜீவை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராஜி வீட்டுக்கு வருகிறார். பின் நடந்ததை எல்லாம் கோமதியிடம் சொல்லி டியூஷன் எடுக்கும் விஷயத்தையும் சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். அதெல்லாம் முடியாது நான் டியூஷன் எடுப்பேன். இதை நீங்கள் மாமாவிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று ராஜி மிரட்டுகிறார்.

இன்றைய எபிசோட்:

கோமதியும் வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொள்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர் முகமே வாடுகிறது. அதற்கு பின் பாண்டியன், செலவிற்கு கொஞ்சம் பணத்தை சித்தப்பாவிடம் கொடுக்க, அவர் சந்தோஷப்டுகிறார். பின் டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொல்ல சொல்லி கோமதி இடம் ராஜி சிக்னல் கொடுக்கிறார். ஆனால், அவர் பயத்தில் அமைதியாக நிற்கிறார். மீண்டும் கோமதி- ராஜி சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தங்கமயில் வந்தவுடன் அமைதி ஆனார்கள். இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்புகிறார். ஆனால், அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full