பழனியிடம் கேவலமாக நடந்து கொள்ளும் தங்கமயில், கோபத்தில் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 15/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், உன் வேலையை பார் என்று தெனாவட்டாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் காந்திமதியின் 75வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முத்துவேல் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காந்திமதி, என்னுடைய பிறந்தநாளுக்கு ரெண்டு குடும்பமும் ஒன்று சேரனும். என்னுடைய மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் எல்லோருமே வரணும் என்றார். சக்திவேல், இது நடக்காத ஒன்று. அவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்றார்.

காந்திமதி, என்னுடைய இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து நடத்தினால் இந்த பிறந்த நாளை நான் கொண்டாடுவேன். இல்லை என்றால் நான் இந்த விழாவிற்கு வரமாட்டேன் என்றார். இது எல்லாம் கேட்டு சக்திவேலுக்கு பயங்கர கோபம் வந்தது. குமார், வீட்டின் மருமகள் எல்லோருமே அப்பத்தாவிற்கு தான் சப்போர்ட் செய்து கோமதியை அழைக்க சொன்னார்கள். ஆனால், சக்திவேல் முடியாது என்று வீம்பாக இருந்தார். இன்னொரு பக்கம் மீனா வேலைக்கு தயாராகி இருந்தார். போதை தெளிந்த செந்தில், காபி வேண்டும் என்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மீனா, பால் இல்லை என்றார். உடனே செந்தில், இது கூட செய்ய முடியாதா என்றெல்லாம் பேசி இருந்தார். பின் செந்தில், யாரிடமும் கேட்காமல் பாண்டியன் கொடுத்த பணத்தை வைத்து வீட்டிற்கு தேவையான எல்லா பொருள்களையுமே வாங்கி போட்டார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் கோமதி வருவதை பார்த்த குமார், அவரிடம் பேசிய முயற்சித்தார். ஆனால், கோமதி சரியாக பேசவில்லை திட்டி அனுப்பி விட்டார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். கோமதி, மீனாவை நினைத்துக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவை பார்த்து வீட்டில் உள்ள எல்லாருமே சந்தோஷப்படுகிறார்கள். அப்போது மீனா, சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விடுவோம், கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் சொல்வதால் கோமதி சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் ராஜி-மீனா இருவரும் பேசிக் கொண்டு வருகிறார்கள். மீனா, எனக்கு அங்கு பிடிக்கவே இல்லை என்று நடந்ததை சொல்கிறார். இதனால் ராஜி வருத்தப்படுகிறார். அந்த சமயம் போன் செய்த செந்தில், எங்கு இருக்கிறாய்? சமைக்கவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு மீனா, நான் கிளம்பி வந்து விட்டேன். சாப்பாடு செய்யவில்லை. நான் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கடையில் சரவணன் வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது பழனியின் காலில் அடிபட்டு விடுவதால் அவரை சரவணன், சாரில் உட்கார்ந்து இருந்த மாணிக்கத்தை எழுப்பி உட்கார வைக்கிறார். இதனால் தங்கமயிலுக்கு கடுப்பாகிறது. பின் கொஞ்ச நேரம் கழித்து தங்கமயில், எனக்கு கால் வலிக்கிறது. சாரில் இருந்து எழுங்கள் என்று சொல்லி உட்கார்ந்து கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து சரவணனுக்கு பயங்கர கோபம் வருகிறது. உடனே பழனி, ஒன்னும் பிரச்சினை இல்லை. நான் வீட்டிற்கு போகிறேன் என்று சென்று விடுகிறார். வீட்டில் பழனிக்கு, சுகன்யா மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full