எதிர்பார்ப்பில் ஆசையாக காத்திருந்த தங்கமயில், சரவணன் செய்த வேலை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி சோகமாகவே வீட்டில் இருப்பதால் கோமதி அவரை அழைத்துக் கொண்டு வெளியே போனார். வெளியே போகும்போது எல்லோருமே அரசியின் திருமணத்தைப் பற்றியும், அவள் வீட்டை விட்டு ஓடிப் போனதை பற்றியும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால் அரசி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் கோபத்தில் கோமதி, அரசியை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே வந்து விட்டார். பின் வீட்டில் வெளியில் நடந்ததை சொல்லி, சுகன்யாவிடம் உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று சொன்னார் கோமதி.
அதற்குப்பின் சுகன்யா வெளியில் சோகமாக இருந்தார். அப்போது சுகன்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தங்கமயிலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் வீட்டிற்கு வந்த
பாண்டியன் இடம் கோமதி நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். உடனே பாண்டியன், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொன்னார். பின் சிறிது நேரம் கழித்து பாண்டியன், அரசியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது வெளியே மைக் செட் பொருத்தப்பட்ட ஆட்டோ இருக்கிறது. அதை பார்த்து கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் பாண்டியன் மைக்கை பிடித்து, ஊர் உலகத்தில் நடக்காத விஷயம் நடக்கவில்லை. ஊரில் உங்களுக்கு வேலை இல்லை என்றால் என் மகளைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தான் பேசுவீர்களா? இதனால் என் மகள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தார். உங்களால் தான் என் மகள் அவமானப்பட்டார். என் மகளின் வாழ்க்கையை பற்றி யாரும் பேச தேவையில்லை. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று ஆவேசமாக பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகினார்கள்.
நேற்று எபிசோட்:
பின் ஊர் முழுக்க அரசிக்காக பாண்டியன் பேசி இருந்தார். இதை டிவியிலும் டிவியிலும் ஒளிபரப்பி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், கோமதி தான் டென்ஷன் ஆனார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நான் தவறு செய்து விட்டேனா என்று கேட்டார். கோமதி, பாண்டியனை திட்டினார். உடனே அரசி, என் அப்பா எனக்காக தான் செய்தார். எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்றார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் செய்த செயலை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாண்டியன் மட்டும் இல்லை. அப்போது செந்தில், நீ அப்பாவை புகழ்ந்து பேசுவதெல்லாம் ஓவர் என்று சொல்கிறார். அதற்கு அரசி, அப்பா செய்தது முழுக்க முழுக்க சரிதான் என்று ரொம்ப பெருமையாக தன்னுடைய தந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ரூமில் தங்கமயில், தன்னுடைய கணவர் ஏதாவது சர்ப்ரைஸ் செய்வார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ரூமிற்கு வந்த சரவணன், ஏதோ ஒரு பொருளை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், தங்கமயில் தனக்கான பொருள் தான் தேடுகிறார் என்று தப்பாக புரிந்து கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் தங்கமயில், எனக்காக எதுவும் வாங்கி வரவில்லையா? சர்ப்ரைஸ் என்று சொன்னீர்கள் என்கிறார்.
அதற்கு சரவணன், அதை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. எந்த கிப்டும் கொடுக்கவில்லை. இதனால் தங்கமயில் ரொம்பவே வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ரூமில் கதிர், ராஜி இருவரும் ஜாலியாக குழந்தைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், எதார்த்தமாக உன்னுடைய குழந்தையை என்னை எப்படி கூப்பிடும்? என்று சொல்ல, உடனே ராஜி கோபப்பட்டு திட்டி விட்டு செல்கிறார். அதற்கு பின் தான் கேட்ட கேள்வி தப்பு என்று கதிருக்கு புரிந்தது. இத்துடன் சீரியல் முடிகிறது