ஆன்லைன் புக்கிங் மூலம் பாண்டியனுக்கு வைத்த ஆப்பு, அதிர்ச்சியில் தங்கமயில்- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/8/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியல் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். ஆனால், பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் பாண்டியன் ஒத்து கொள்கிறார். ஆனால், கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்கிறார். கடைசியில் இருவரும் சண்டை போட்டு ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க ஒத்து கொள்கிறார். இதை எல்லாம் எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா பார்த்து, நான் சாவதற்குள் என் மகளிடம் பேச வேண்டும். அதற்கு முடியாதா? என்று புலம்பி அழுதார்.

சீரியல் கதை:

இதை பார்த்த அவர் மகன்கள் கோபமாக திட்டி பேசி இருந்தார்கள். இதையெல்லாம் அறிந்த பாண்டியன், கோமதி கவலைப்படுகிறார்கள். பின் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். நேற்று எபிசோடில், பாண்டியன், நீங்கள் மூணு பேருமே லீவு கேட்க முடியுமா? சரவணனுடன் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் அதிர்ச்சியாகி கோவப்பட்டு நிற்கிறார். அதற்குப் பின் ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோடில், மீனா ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை, எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்துகிறார். கோமதியும் வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், எப்படியோ மீனா,ராஜி இருவரும் மாமியாரை சமாதானம் செய்து விடுகிறார்கள். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், சென்னையில் ரூம் புக் செய்வதற்கு ஆன்லைனில் பண்ணிவிடலாம் என்று தங்கமயில் சொல்கிறார்.

https://youtu.be/OE0qSdZhi4w?si=AytlGvp_XlKi6YaI

சீரியல் ப்ரோமோ:

பாண்டியனும் ஓகே சொல்லி, எவ்வளவு மொத்தம் செலவாகிறது என்று கேட்டதற்கு 5000 ரூபாய் என்று சொல்கிறார். பாண்டியனும் ஓகே சொல்ல தங்கமயில் புக் செய்து விடுகிறார். சரவணன், ரூமுக்கு 5000 செலவாகிவிட்டது. வேறு எந்த செலவையும் அப்பாவுக்கு வைக்கக்கூடாது என்று சொல்கிறார். அப்போது தங்க மயிலின் மொபைலுக்கு ரூமின் மொத்த செலவு 20,000, அட்வான்ஸ் தொகை தான் 5000 என்று மெசேஜ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன் அம்மாவிடம் நடந்தை சொல்ல அவர், எதுவும் இப்போதைக்கு சொல்லாதே. சென்னைக்கு போன பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். தங்க மயில் பயத்தில் இருக்கிறார். இனிவரும் நாட்களில் பணப் பிரச்சனையால் சரவணன்- தங்க மயிலுக்கு இடையே விரிசல் ஏற்படுமா? ரூமின் விவகாரம் பாண்டியனுக்கு தெரிய வருமா? போன்று சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

behindtalkies AMP · Quick view
View full