வேலை விஷயத்தில் தங்கமயில் மறைக்கும் ரகசியம், மீனாவுக்கு எழுந்த சந்தேகம்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில், வேலைக்கு போக விருப்பம் இல்லை என்று சொல்ல, சரவணன் சம்மதித்தார். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து அப்பத்தா ரொம்ப வருத்தப்பட்டார். பின் அப்பத்தாவை வீட்டுக்குள் ராஜி-கோமதி அழைத்து சென்று இருந்தார்கள். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தது. கதிர் தன்னுடைய அப்பாவை பார்த்து பேசி இருந்தார். பின் இதை மீனா, செந்திலுக்கு போன் செய்து சொன்னார். இதனால் பாண்டியன், செந்தில் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
மேலும், அப்பத்தா வெளியே வரும் போது பாண்டியன், ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லோருமே வந்து விட்டார்கள். இதனால் கலவர பூமியாகி இருந்தது. ராஜியின் அப்பா, நீ உறவை ஒட்ட வைக்கிறாயா? இனிமேல் இந்த குடும்பத்திற்கும் உனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று குலதெய்வ சாமி மீது சத்தியம் செய். ஒரு வேளை முடியாது என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று மோசமாக தன்னுடைய தாய் என்று கூட பார்க்காமல் திட்டி இருந்தார். இதனால் பாண்டியன், அவருடைய மகன்கள் எல்லோருமே அப்பத்தாவிற்கு சப்போர்ட் செய்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோடில் ராஜிி அப்பா, சித்தப்பா இருவருமே எல்லோரையும் கேவலமாக பேச, தாங்க முடியாமல் பாண்டியன் கொந்தளித்து பேசி இருந்தார். அப்போது, எங்கள் வீட்டுக்கு வந்து விடுங்கள். நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம் என்று அப்பத்தாவிடம் பாண்டியன் சொல்ல, எல்லோருமே அப்பத்தாவை அழைக்கிறார்கள். கடைசியில் அப்பத்தா, பாண்டியனிடம் கையெடுத்து கும்பிட்டு, என்னுடைய மகன்களுக்கு பாவத்தை நான் கொடுக்கவில்லை. நான் அவர்களுடன் போகிறேன் என்று வந்து விட்டார். இதனால் பாண்டியனும் அவருடைய குடும்பமும் ரொம்ப கவலைப்பட்டது.
நேற்று எபிசோட்:
அப்போது பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ராஜி அப்பா- சித்தப்பா இருவருமே வீட்டுக்குள் மீண்டும் தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டு இருந்தார்கள். அப்போது அவர்கள், இதுதான் கடைசி முறை. இனிமேல் நீ உறவை ஒட்ட வைக்கலாம் என்று பார்த்தால் எங்களை தலைமுழுகி விடு, இல்லை என்றால் நாங்கள் உன்னை தலைமுழுகி விடுவோம் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். இதனால் அப்பத்தா, என்ன சொல்வது என்றே புரியாமல் தவித்து நின்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தாவை நினைத்து கோமதி கவலைப்பட்டு கொண்டு இருக்கிறார். ராஜி, கதிரின் உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். ஆனால், கதிர் மீண்டும் வேலைக்கு போக நினைக்கிறார். பின் கிச்சனில் எல்லோருமே சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயிலை அழைத்த பாண்டியன், உன்னை வேலைக்கு வர சொல்கிறார்கள். நீ ஏன் கிளம்பவில்லையா? என்று கேட்க, அவர் ரொம்பவே பதறுகிறார். பின் இதைப் பற்றி சரவணன் இடம் தங்கமயில் பேசுகிறார். ஆனால், அவர் அப்பா சொல்வது போல நடந்து கொள் என்று கிளம்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் கவனித்த மீனா, ராஜிக்கு சந்தேகம் வருகிறது. பின் அவர்கள் தங்கமயிலிடம் விசாரிக்கிறார்கள். அப்போது மீனா, நகை விஷயத்தை போல் சர்டிபிகேட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லி விடுங்கள், சமாளிக்கலாம். நாங்கள் உதவி செய்கிறோம் என்று சொல்கிறார். தங்கமயிலும் உண்மையை சொல்ல பார்க்கிறார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்தவுடன் அவர் அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் அரசி வருவதை பார்த்த சக்தி, அவரை கரெக்ட் பண்ண தன்னுடைய நண்பர்களை வைத்து திட்டம் போடுகிறார். அவர்களும் அரசி இடம் வம்பு இழுக்க, அவர் அங்கிருந்து தப்பிக்க பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.