சரவணன் செய்த செயலால் மனம் உடைந்து வேதனைப்படும் தங்கமயில், அடுத்து என்ன ? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 18/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பணம் விஷயத்தில் தவறு செய்தது தங்கமயில் என்று தெரிந்தவுடன் பாண்டியன், கோமதி கோபப்பட்டு பேச, தங்கமயில் வருத்தப்பட்டு அழுதார். ராஜி-மீனா எவ்வளோ சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின் ராஜி - மீனா இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவில்லை. தங்கமயில் இடம் என்னென்னவோ பேசி ராஜு- மீனா சமாதானம் செய்து சாப்பிட அழைத்து வந்தார்கள்.

கோபத்தில் இருந்த கோமதி நக்கல் ஆகவே தங்கமயிலை வம்பு இழுத்து பேசி இருந்தார். வீட்டில் பாண்டியன், எல்லோரையும் வரவைத்து குடும்ப சூழ்நிலையை எடுத்து சொன்னார். ஆனால், அது எல்லோருக்குமே போர் அடித்தது. இவர்கள் எல்லோருமே சேர்ந்து பேசும்போது தங்கமயிலை யாரும் கூப்பிடவே இல்லை. இதை எல்லாம் தங்கமயில் ரூமில் இருந்து பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். அதற்குப்பின் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தங்கமயிலை யாருமே கூப்பிடவில்லை. தன்னை யாராவது கூப்பிடுவார்கள் என்று அவரும் எதிர்பார்த்து ஏமாந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அதற்குப் பின் மீனா- ராஜி இருவருமே தங்கமயிலை சாப்பிட கூப்பிட்டார்கள். ஆனால், அவர் வரவே இல்லை. எனக்கு சாப்பிட விருப்பமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார். பின் தன் அம்மாவிடம் தங்கமயில் நடந்ததை சொல்ல அவர் மீண்டும் அறிவுரை சொல்ல பார்த்தார். உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று திட்டி போனை வைத்து விட்டார். நேற்று எபிசோட்டில் தங்கமயில் சாப்பிடவில்லை என்று சரவணிடம் சாப்பாடு கொடுத்து மீனா அனுப்பி விட்டார்.

நேற்று எபிசோட்:

முதலில் மறுத்த சரவணன் பின் சாப்பாட்டை எடுத்து கொண்டு போனார். ஆனால், அவர் பெரிதாக வருத்தப்படாமல் சாப்பாட்டை மேசை மீது வைத்து சாப்பிடு என்று சொல்லி விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து தங்கமயில், ரொம்பவே கவலைப்பட்டார். இன்னொரு பக்கம் சித்தப்பு, தன்னுடைய மாமா செய்வது ரொம்ப தவறு என்று கோமதி அறிவுரை சொன்னார். இதனால் கோமதியும் பாண்டியனிடம் கதிரை அடித்ததை பற்றி பேசி அறிவுரை சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் சரவணன் தன்னிடம் எதுவுமே பேசவில்லையே என்ற வருத்தத்தில் சாப்பிடாமலேயே தங்கமயில் இருக்கிறார். அப்போது உள்ளே வந்த சரவணன், சாப்பாடு வீணாக போகிறது என்று கிச்சனில் கொண்டு போய் சாப்பிடுகிறார். இதை பார்த்து தங்கமயிலுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. மறுநாள் காலையில் தங்கமயில், கோமதியிடம் பேச வருகிறார். ஆனால், அவர் முகத்தில் அடித்த மாதிரி பேசி விட்டு சென்று விடுகிறார். மீனா- ராஜி இருவருமே அவருக்கு சமாதானம் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் தங்கமயிலும் இரவு சரவணன் செய்த வேலையை சொல்ல மீனாவிற்கு கோபம் வருகிறது. இதை சரவணன் இடம் கேட்க அவர் சாப்பாடு வீணாகிவிடும். அதனால் சாப்பிட்டு விட்டேன் என்று மொக்கையான காரணத்தை சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் பாண்டியன் எல்லோரையும் வரவைத்து, தங்க மயிலுக்கு அறிவுரை சொல்ல, அவர் எதுவுமே பேசாமல் அழுது கொண்டே இருக்கிறார். பின் கிச்சனின் கோமதியிடம் சரவணன் செய்த வேலையை மீனா சொல்ல, என் மகன் சரியாக தான் செய்திருக்கிறான் என்று கோமதி பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு தங்கமயில் ரொம்ப வருத்தப்பட்டு அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full