திருடன் கெட்டப்பில் தங்கமயில் அப்பா செய்த வேலை, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 20/12/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சரவணன் இடம் தங்கமயில், வேலைக்கு போகவில்லை என்று சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. இதையெல்லாம் கவனித்த மீனா, ராஜிக்கு சந்தேகம் வந்தது. பின் அவர்கள் இதை பற்றி தங்கமயிலிடம் விசாரித்தார்கள். அப்போது தங்கமயிலும் உண்மையை சொல்ல பார்த்தார். உடனே கோமதி வந்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் அரசி வருவதை பார்த்த சக்தி, அவரை கரெக்ட் பண்ண தன்னுடைய நண்பர்களை வைத்து திட்டம் போட்டார். அவர்களும் அரசி இடம் வம்பு இழுத்து இருந்தார்கள். அப்போது பழனி, செந்தில் இருவருமே அந்த நபர்களை அடித்து துரத்தி விட்டு அரசியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

இதை செய்தது சக்தி தான் என்று பழனி புரிந்து கொண்டார். இன்னொரு பக்கம் தங்கமயில், பாண்டியன் வீட்டில் நடந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லி அழுது புலம்பி இருந்தார். அவர்களும் சமாதானம் செய்தும் தங்கமயில் கேட்கவில்லை. பின் அவர், நான் உண்மையை சொல்லிவிடுகிறேன் என்று சொல்ல, ஏதாவது செய்கிறேன் என்று ஆறுதல் சொன்னார் தங்கமயில் அப்பா. இன்னொரு பக்கம் கதிர், சவாரி வந்திருக்கிறது என்று கிளம்பினார். பாண்டியன் சொல்லியுமே அவர் கேட்காமல் சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் கோமதி-ராஜி இருவருமே எடுத்து சொல்லியும் கேட்காமல் கதிர் சென்று விட்டார். அதற்குப்பின் இதை பற்றி பாண்டியன், கோபப்பட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செந்தில், நீங்கள் இப்போது பணம் கொடுப்பீர்கள். பிறகு ஏதாவது காரணம் சொல்வீர்கள் என்று சொன்னவுடன் பாண்டியன் ரொம்பவே வருத்தப்பட்டார். நேற்று எபிசோடில் கோமதி, செந்தில் இடும் சண்டை போடுகிறார். அப்போது செந்தில், நான் என்னுடைய மனைவிக்கு ஒரு புடவை வாங்கி தர வேண்டும் என்றால் கூட என்னிடம் பணம் கிடையாது. அப்படியே அவரிடம் கேட்டாலும் 1008 கேள்வி கேட்பார்.

நேற்று எபிசோட்:

அந்த நிலைமை கதிருக்கு வேண்டாம். என்னுடைய நிலைமை தான் இப்படி? என்று ரொம்ப எமோஷனலாக பேசிவிட்டு போனார். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் கோமதி, செந்தில் பேசியதை நினைத்து திட்டிக் கொண்டிருந்தர். ராஜி சமாதானம் செய்தும் கோமதி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயம் வந்த மீனா, வழக்கம் போல காமெடியாக கோமதியிடம் பேச , அவர் கோபத்தில் கத்தி இருந்தார். மீனாவிற்கு ஒன்னும் புரியவில்லை. உடனே கோமதி, இதற்கு முன் என் மகன்கள் இப்படி இல்லை. எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் நடக்கிறார்கள் என்று சொன்னவுடன் மீனாவிற்கு கோபம் வந்தது.

இன்றைய எபிசோட்:

தங்கமயில்-ராஜி இருவரும் மீனாவிற்கு சப்போர்ட் செய்து பேச, அவர்களையும் ரொம்ப மோசமாக பேசி இருந்தார் கோமதி. பின் கிச்சனில் கோமதி இடம் பேசாமல் மூவருமே தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அரசி பேசியும் அவர்கள் சரியாக பேசவில்லை. இதனால் மீண்டும் மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மூன்று மருமகளுமே ரொம்ப வேதனையாக கோமதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே கோமதி, நான் கோபத்தில் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். உங்க அம்மா பேசியிருந்தால் மன்னிக்க மாட்டீர்களா? என்று சொல்ல, எல்லோரும் சமாதானம் ஆகி விட்டார்கள்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் ராஜி, கதிருக்கு போன் செய்து அக்கறையாக பேசுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலுக்கு அவருடைய அப்பா, போன் செய்து கதவை திறந்து வை. நான் வீட்டுக்குள் வருகிறேன் என்று சொல்கிறார்.
தங்கமயிலுமே பயத்தில் கதவை திறந்து வைக்கிறார். அப்போது தங்கமயில், நான் பொய் சொன்னேன் என்ற பழியை ஏற்றுகொள்கிறேன், திருட்டுப்பள்ளி வேண்டாம். நீங்கள் கிளம்பி விடுங்கள் என்று சொல்ல, நான் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். பின் தங்கமயில் அப்பா வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயம் பார்த்து பழனி எழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full