பாண்டியன் ஸ்டோர்ஸில் நுழைந்த சில நாட்களிலேயே மருத்துவமனையில் அனுமதியான பிரபல நடிகை - கவலைக்கிடமான நிலை.

By Rajkumar · 28/11/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஸ்டாலின், குமரன், சுஜித்ரா, வெங்கட் முல்லை என்று பலர் நடித்து வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை குமரன் ஜோடிக்கு பிறகு ஜீவா மீனா ஜோடி தான் பிரபலம். இந்த சீரியல் 484 எபிசோடுகளை கடந்து 500 வது எபிசோடை நெருங்கி வருகிறது. சமீபத்தில் கூட இந்த சீரியலில் மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பபட்டது.

இந்த சீரியலில் கதிர் முல்லை ஜோடிக்கு பின்னர் மிகவும் பிரபலம் என்றால் ஜீவா - மீனா ஜோடி தான். அதே போல இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமா உண்மையிலேயே கர்ப்பமாக இருந்து வந்தார்.அதனை சமாளிக்கும் விதமாக இவர் நடித்து வந்த மீனா கதாபாத்திரமும் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகளை அமைத்தார்கள். மேலும், சமீபத்தில் தான் மீனா கதாபாத்திரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்கு நுழைந்தார்.

அதே எபிசோடில் இந்த சீரியலின் புதிய எண்ட்ரியாக பிரபல நடிகையான கௌசல்யா செந்தாமரை வந்திருந்தார். இந்த சீரியலில் அவர் மீனா கதாபாத்திரத்தின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அந்த சீரியல் மாபெரும் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 74 வயதாகும் இவர் திடீரென மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நடிகை கௌசல்யா செந்தாமரை மறைந்த பழம்பெரும் நடிகர் செந்தாமரையின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது இவர் மறைந்த முதல்வரும் நடிகருமான எம்ஜிஆருடன் திருடாதே படத்தில் நடித்திருக்கிறார் அதேபோல வயசு பசங்க போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். வயசு பசங்க’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full