ஆயுத எழுத்து சரண்யாயுடன் சித்ரா இறுதியாக பங்குபெற்ற நிகழ்ச்சி - வெளியான வீடியோ.

By Rajkumar · 6/1/2021

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

https://www.youtube.com/watch?v=EAUbSwKY9f8&feature=youtu.be

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் , பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார்.

சித்ரா இறந்த போது இறுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று அப்போது வைரலாக பரவிவந்தது . சித்ரா இறந்த ஒரு நாள் முன்பு அன்றய இரவு 7 மணி அளவில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுஇருந்தார் . அதே போல சித்ரா இறந்த ஒரு நாள் முன்பு இரவு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட செல்ஃபி வீடியோக்களை பதிவிட்டு இருந்தார்

https://twitter.com/Mysteri13472103/status/1336506873898434560

அதில் ஒரு வீடியோவில் மேடம் லவ் பண்ணதும் பண்ணாங்க, எப்பயும் போன் தான் எனக்கூறி சித்ராவை சரண்யா கிண்டலடிக்கும் காட்சிகளும்இடம் பெற்று இருந்தனர் . ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மறைவதற்குள் சித்ரா இந்த உலகைவிட்டு மறைந்தத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சித்ரா, சரண்யாவுடன் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full