ரைட்டு, இவங்களும் இப்படி நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்த ஆரம்பிச்சிட்டாங்களா.

By Rajkumar · 31/7/2020

கொரோனா சமயத்தில் லாக்டவுனில் இருக்கும் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் போரடித்து போய் வீட்டில் முடங்கியுள்ளனர். அதிலும் இத்தனை நாள் வரை இழுத்து போத்திகொண்டு இருந்த நடிகைகள் கூட கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகையும் முன்னாள் தொகுப்பாளினியான சித்ராவும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

https://www.instagram.com/p/CDSeIaaHOAi/

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.

https://www.instagram.com/p/CDRvi0CHokr/

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். மேலும், சித்ரா, குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று உள்ளார்.சமீபத்தில் இவர் நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full