பாண்டியன் ஸ்டோர்ஸ் : தனத்திற்கு நல்லபடியாக ஆபரேஷன் நடக்குமா? மூர்த்திக்கு உண்மை தெரிய வருமா?

By ·

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு ஆபரேஷன் நடக்க முல்லை- மீனா போடும் நாடகம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சீரியலில் குழந்தை பிரசவம் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள். முதலில் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது. அதற்கு பின் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதனிடையே தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் தனம்-மீனா மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது. இதனால் இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். ஆனால், தனத்திற்கு இருக்கும் பிரச்சனை முல்லைக்கு தெரிய வருகிறது. இதனால் முல்லையும் மீனாவும் சேர்ந்து தனத்திற்கு ஆபரேஷன் செய்ய திட்டம் போடுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=ufI0X9754ic

சீரியலின் கதை:

பிறகு தனத்திற்கு பிரசவ வலி வந்தது போல் முல்லை- மீனா இருவரும் டிராமா போடுகிறார்கள். பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தவுடன் எப்படியாவது ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க திட்டம் போடுகிறார்கள். அதற்கேற்ப ஜீவாவிடமும் கதிரிடமும் மீனா, முல்லை பேசி தனத்திற்கு குழந்தை பிறக்க ஏற்பாடு செய்தார்கள். மேலும், தனத்திற்கு ஆபரேஷன் செய்து நல்ல படியாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

தனத்தின் நிலைமை:

இதைக் கேட்டவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பிறகு வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். ஆனால், சீக்கிரமாகவே தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் முல்லையும் மீனாவும் தவிக்கிறார்கள். வீட்டில் எல்லோருமே குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

தனத்திற்கு நடக்கும் ஆப்ரேஷன்:

அப்போது அரசாங்கத் தேர்வு எழுதுவது போல் ட்ராமா செய்து ஆபரேஷன் செய்யலாம் என்று முல்லையும் மீனாவும் திட்டம் போடுகிறார்கள். இதற்காக வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசுகிறார்கள். முதலில் வீட்டில் உள்ளவர்கள் தயங்குகிறார்கள். பின் எப்படியோ பேசி மூர்த்தியிடம் சம்மதம் வாங்கினார்கள். இனி தனத்திற்கு நல்லபடியாக ஆபரேஷன் நடக்குமா? மூர்த்திக்கு உண்மை தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full