பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் ஐஸ்வர்யாவிற்கு காதல் திருமணம் - வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

By Rajkumar · 1/10/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷாலி தணிகா.

இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். சமீபத்தில் வைஷாலி தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண ஷாப்பிங் என்று கேப்ஷனை போட்டு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். இதனால் இவர் தான் வைஷாலியை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரா என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்த போதே இவர் ஒருவரை காதலிக்கிறார் என்றும் அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் அவரை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய பெயர் சத்யா தேவ், கடந்த சில வருடங்களாகவே நண்பர்களாக பழகி வந்துள்ள இவர்கள் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள்.

மேலும் தங்கள் காதலை இரு வீட்டாருக்கும் தெரிவித்து சம்மதம் வாங்கியிருக்கிறார்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது வைஷாலி திருமணம் செய்துகொள்ள இருக்கும் சத்யா சென்னையில் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் MSN திருமண மண்டபத்தின் ஓனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full