ப்ளீஸ் தயவுசெய்து தவறான செய்தியை பரப்பாதீர்கள்- பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை போட்ட திடீர் பதிவு
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விலாசினி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிந்தது.
இதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. எடுக்கிறார்கள். இதில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஹேமா, ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது சீரியலில் சரவணன்- தங்கமயில் ஹனிமூன் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 :
தங்கமயில் செய்த வேலையால் ஹோட்டலில் காசு கட்ட முடியாமல் சரவணன் தவிக்கிறார். இதை அறிந்த கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் பணத்தை மொபைலில் இருந்து எடுத்து சரவணனுக்கு அனுப்பி விடுகிறார். இதனால் வீட்டில் என்ன கலவரம்? வரும் என்று சித்தப்பு, செந்தில் பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் சரவணன்- தங்கமயில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சீரியல் சென்று கொண்டு இருக்கின்றது.
ஹாஷினி குறித்த தகவல்:
மேலும், இந்த சீரியலில் ஹாசினி என்கிற விலாசினி அவர்கள் பாண்டியனின் மூத்த மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தவமாய் தவமிருந்து சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின் இவர் சீரியலில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தான். இதை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற தொடரில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
ஹாஷினி பதிவு:
மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் பாடகியும் ஆவார். நிறைய கான்செர்ட்களில் இவர் பாடிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை ஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், சமீபகாலமாக நான் செட்டில் ஆகிவிட்டேன். நம்ம இந்திய நாட்டிலேயே இல்லை. வெளிநாட்டில் இருக்கிறேன் என்றெல்லாம் என்னை பற்றி தவறான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வதந்திகள் குறித்து சொன்னது:
அதற்கு தான் விளக்கம் கொடுக்கும் வகையில் நான் இந்த பதிவை போட்டு இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த ஊரான சென்னையில் தான் இருக்கிறேன். அதே மாதிரி நான் தொடர்ந்து நடித்தும், கான்செர்ட்டில் பெர்ஃபாமன்ஸ் பண்ணியும், விஜே ஆகவும் பணியாற்றி கொண்டிருக்கிறேன். அதே மாதிரி கார்ப்பரேட் ஈவண்டுகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறேன். தயங்காமல் எனக்கு போன் பண்ணி என்னுடைய இருப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ப்ளீஸ், தயவுசெய்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று பதிவிட்டார்.