வெளியானது சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படம் - குவியும் வாழ்த்து.

By Rajkumar · 25/8/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சித்ராவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதுப்புது தொலைக்காட்சிகளை வெளியேறுவது விஜய் டிவிதான் அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ட்ரெயின் டைம் சீரியலாக திகழ்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்த தொடரில் பல்வேறு நபர்கள் நடித்தாலும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் வரும் குமரன் மற்றும் சித்ரா தான் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஜோடிகளாக திகழ்ந்துவருகிறார்கள்.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. சித்ரா திருமணம் செய்து கொள்ளும் நபரின் பெயர் ஹேமந்த் ரவி.

தனது திருமணம் குறித்து பேசியுள்ள சித்ரா, இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சித்ரா மற்றும் ஹேமந்த் ரவியின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full