பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை ஆயிரமா ? அவரே சொன்ன தகவல்.

By Rajkumar · 18/5/2020

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள்.

இதையும் பாருங்க : லேட்டஸ்ட் நியூஸ் : ஊரடங்கு முடிந்ததும் வரலக்ஷ்மிக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?

இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.குமரன் சின்னத்தையும் அறிமுகமானது உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் ஒன்றில்தான் அதன்பின்னர் இவர் மாப்பிள்ளை ஈரமான ரோஜாவே என்று பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிதான்.

வீடியோவில் 9:48 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=Gyiq3IChl6w&t=590s

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற குமரனிடம் அவர் வாங்கும் சம்பளம் குறித்து கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த குமரன் தனுக்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறிய சம்பள விவரம் கொஞ்சம் வேகமாக பார்வார்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் அந்த நொடிகளில் நீங்கள் வீடியோவின் வேகத்தை 0.25 வேகத்தில் குறைத்தால் அவர் கூறிய சம்பளத்தின் விவரத்தை நீங்கள் தெளிவாக கேட்க முடியும். கண்டு பிடித்தால் கமன்ட்டில் சொல்லுங்கள்.

behindtalkies AMP · Quick view
View full