கர்ப்பமாக இருக்கும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா நடத்திய குயூட் போட்டோ ஷூட்.

By Rajkumar · 1/10/2020

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.

அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும்,

இப்படி ஒரு நிலையில் நடிகை ஹேமா கர்ப்பமாக இருக்கும் போது நடத்திய போட்டோ ஷூட் இன் புகைப்படம் ஐப் பகிர்ந்துள்ளார் புகைப்படத்தில் நீல நிற உடை அணிந்து நீல பலூனை கையில் பிடித்தபடி இருக்கிறார் மீனா பொதுவாக ஆண் குழந்தை என்றால் நீல நிறத்தையும் பெண் குழந்தை என்றால் பிங்க் நிறத்தையும் குறிப்பிடுவது வழக்கம். இந்த படத்தின் மூலம் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தைதான் என்று மீனா கணித்துள்ளார் என்பது போலதான் தோன்றுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full