நடிக்கும் போது கையில் இருக்கும் டாட்டூவை மறைக்கும் முல்லை. இதான் அந்த டாட்டூவாம்.

By Rajkumar · 16/12/2019

தொலைக்காட்சியில் தொகுப்பாளினிகளாக இருந்து பின்னர் நடிகையானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினிகளாக இருந்த ஜாக்லின், பிரியா பவானி ஷங்கர், ரம்யா என்று பலரும் தற்போது நடிகைகளாகவும் அசத்தி வருகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்து தற்போது சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்று சொன்னால் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் சொல்லலாம்.

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. இவர் அன்பால் அனைவரையும் அரவணைப்பார். அவர் தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. இவர் அன்பால் அனைவரையும் அரவணைப்பார். அவர் தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார். இந்த தொடரில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்-- முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

நடிகை சித்ரா சீரியல்களில் நடிக்கும் போது மட்டும் தனது கையில் இருக்கும் டாட்டூ ஒன்றை மறைத்துக்கொள்கிறார். அப்படி என்ன டாட்டூ அது என்று பார்த்தல் 'மைக்' கை தான் தனது கையில் டாட்டூவாக குத்திக்கொண்டு இருக்கிறார் சித்ரா. நடிகை சித்ரா நடிப்பதற்கு முன்பாக ஆர் ஜேவாகவும் விஜேவாகவும் இருந்து வந்ததால் தனது தொழிலின் மீது இருக்கும் பக்தியால் இப்படி மைக்கை தனது கையில் டாட்டூவாக குத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால், அந்த பக்தி நடிக்கும் போது மட்டும் மேக்கப் மூலம் மறைந்து விடுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full