அட, முந்தானை முடிச்சு படத்துல வந்தது ஆண் குழந்தை இல்லையா ? அது இந்த விஜய் டிவி சீரியல் நடிகை தான்.

By Rajkumar · 7/3/2021

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கே பாக்யராஜ்ஜூம் ஒருவர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை,தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதோடு நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இது தான். மேலும், இந்த படம் அப்போதே திரையரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பின்னர் இந்த முந்தானை முடிச்சு படத்தினை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

இதையும் பாருங்க : புகழ் வாங்கிய புதிய காரை கொண்டு வர சொல்லி ஒட்டிய சந்தானம். வைரல் வீடியோ.

இந்த படத்தில் மனைவியை இழந்த பாக்கியராஜ், ஒரு கைக் குழந்தையுடன் தனியாக கஷ்டப்படுவதை பார்த்து தான் ஊர்வசி இவரை திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தில் பாக்கியராஜின் மகனாக வந்த குழந்தை வேறு யாரும் இல்லை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தான். நடிகை சுஜித்தா அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983 இல் பிறந்தார்.

நடிகை சுஜிதா அவர்கள் தனது சிறு வயதில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். அதே போல இவர் தெலுங்கில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், முந்தானை முடிச்சு படத்தில் ரீமேக்கில் பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ரீமேக் செய்ய பாக்யராஜ் முடிவெடுத்துள்ளார். பாக்கியராஜ் மற்றும் சசிகுமார் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் எல்லாம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full