இப்போ நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்க தான் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின் உருக்கம்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்டாலின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளி திரையில் பல படங்களில் குணசித்திர மேடைகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஆக மிரட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய தாயார் இறந்து இருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய குடும்பம் பற்றி சீரியல் நடிகர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், என்னுடைய அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர். அதனால் தங்களின் இரண்டு மகள்களையும் டீச்சர் ஆக்கி விட்டார்கள். நான் மட்டும் தான் வழி தவறி நடிக்க வந்துவிட்டேன். ஆரம்பத்தில் அம்மாவிற்கு கொஞ்சம் வருத்தம். அதற்குப் பிறகு
அவர்கள் சமாதானம் ஆகி விட்டார்கள். அம்மாவுடைய குடும்பம் பெரிய குடும்பம். அம்மாவுடன் சேர்த்து தாத்தாவுக்கு நாலு பெண்கள், மூணு ஆண்கள், மொத்தம் ஏழு பேர்.
ஸ்டாலின் குறித்த தகவல்:
அம்மாவுடைய பெரிய அக்காவுடைய கணவர் அதாவது என்னுடைய பெரியப்பா முத்து கருப்பு தேவர் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தூணாக இருந்தவர். பெரியப்பா குடும்பத்திலும் ஏழு பேர். அதேபோல மத்த பெரியம்மா, சித்தி, மாமன்கள் எல்லோருமே எங்க அம்மா தேனி பக்கம் வந்ததும் அவங்க பின்னாடியே இந்த பகுதிக்கு குடி வந்து விட்டார்கள். பிறந்தவர்கள் கூட அவ்வளவு பாசமாக அம்மா இருந்ததாலே இன்னைக்கும் சித்தப்பா, பெரியம்மா என நாங்கள் எல்லோரும் அதே ஒற்றுமையோடு இருக்கிறோம்.
ஸ்டாலின் பேட்டி:
ஒரே வீட்டில் தான் இல்லையே தவிர எல்லோரும் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறோம். நல்லது கெட்டதுன்னு கூடினால் ஒரு ஊர் அளவுக்கு சேர்ந்து விடும் எங்களுடைய குடும்பம். எதற்கு இதை சொல்கிறேன் என்றால், அம்மா அந்த மாதிரி எங்களை வளர்த்து விட்டுட்டு போய் இருக்கிறார்கள். அம்மா இறக்கும்போது கூட என் பெரியம்மா மகள் வீட்டில் தான் இருந்தார்கள். இன்னொரு விஷயம் அவங்க படித்தவர்களாக இருந்ததால் சுத்தி இருக்குற எல்லாரையும் நல்லா படித்து நல்ல வேலையில் இருக்கிற மாதிரி பண்ணி விட்டார்கள்.
குடும்பம் பற்றி சொன்னது:
அங்காளி பங்காளிங்க முக்கால்வாசி பேரு இன்னைக்கு அரசு வேலையில் இருக்கிறார்கள். சிலர் வக்கீலாக கூட இருக்கிறார்கள். அதே பழைய ஒற்றுமையோடு இன்னைக்கும் நாங்கள் இருக்கிறோம். அதற்கு முக்கிய காரணம் அம்மா தான். நான் எப்படி பெரியப்பா சித்தப்பா பசங்க கூட ஒற்றுமையாக இருக்கேனோ அதேபோல என் மனைவி மகன்களும் இருக்கிறார்கள். இது இப்படியே தொடரனும் என்பது என்னுடைய ஆசை மட்டும் இல்லை எங்க மொத்த குடும்பத்தினுடைய ஆசை என்று கூறி இருக்கிறார்.