தனது மகனுடன் சுஜிதா நடத்திய போட்டோ ஷூட் - சின்ன வயசுல சுஜிதாவ பாத்த மாதிரியே இருக்காரு.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் தனம் என்ற கதாபத்திரத்தில் நடிகை சுஜித்தா நடித்து வருகிறார். நடிகை சுஜித்தா அவர்கள் சீரியலுக்கு புதிது கிடையாது, தமிழ் மக்களுக்கும் புதிது கிடையாது. ஏன்னா நடிகை சுஜித்தாவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர் சினிமா படங்களிலும் சீரியல்களிலும் நடித்து உள்ளார். சுஜித்தாவின் அப்பா பெயர் டி.எஸ். மணி மற்றும் அம்மா பெயர் ராதா ஆகும்.
மேலும்,நடிகை சுஜித்தா அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983 இல் பிறந்தார். அதோடு இவருக்கு ஒரு தங்கையும், ஒரு அண்ணனும் உள்ளார்கள். அவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், சூரிய கிரன் சமீபத்தில் தெலுங்கு பிக் பாஸில் கூட கலந்து கொண்டார்.சுஜித்தாவின் கணவர் பெயர் தனுஷ். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.இவர் முதன் முதலில் போட்டோகிராபராக தான் இருந்தார். பின்னர் விளம்பர படங்கள் எடுக்கும் இயக்குனர் ஆக மாறி விட்டார்.
அதுமட்டும் இல்லாமல் அவருடைய சில விளம்பர படங்களிலும் கூட நம்ம நடிகை சுஜித்தா நடித்து உள்ளார். மேலும், இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். அவருடைய பெயர் தன்வின். இதனைத்தொடர்ந்து சுஜித்தா அவர்கள் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான். இருந்தாலும் இவர் தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவர் முதன் முதலாக சினிமாத் துறையில் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார். அதுவும் 41 நாள் குழந்தையாக இருக்கும் போது.
அதன் மூலம் தான் நடிகை சுஜித்தாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல படங்களில் சுஜித்தாவுக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் சுஜிதா தனது மகனுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் சுஜிதா சின்ன வயசில் இருந்தது போல அப்படியே இருக்கிறார் சுஜிதாவின் மகன்.