சூப்பர் டாடி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கட் - தேஜு. இது தான் காரணமாம்.
பாண்டியன் ஸ்டோரஸ் ஜீவா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட் ரங்கநாதன். இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். வெங்கட் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் வெங்கட் நடித்து உள்ளார்.
பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் ரோஜா சீரியலில் இரண்டாவது ஹீரோவாக அஸ்வின் கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து இருந்தார். ஆனால், சில காரணங்களால் இவர் சீரியலை விட்டு வெளியேறினார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெங்கட்:
இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசமான கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த சீரியல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
வெங்கட் நடித்த சேனல்கள்:
அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட். இவருக்கும் மீனாவுக்கும் இடையேயான சண்டைகள் எல்லாம் பயங்கர ஃபன்னாக இருக்கும். இது தவிர வெங்கட் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம், ஜெயா டிவி ஜீ பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் வெங்கட் நடித்து உள்ளார். இதனிடையே இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
சூப்பர் டாடி நிகழ்ச்சி:
இவருடைய பெண்ணின் பெயர் தேஜு. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் சூப்பர் டாடி நிகழ்ச்சியும் ஒன்று. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தைகளுடன் பெற்றோர்கள் கலகலப்பாக விளையாடும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ராமர், முத்து, கிங் காங், வேல்முருகன், வினோத் உட்பட பல பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இதில் வெங்கட்டும் தன் மகளுடன் சேர்ந்து விளையாடி இருந்தார்.
சூப்பர் டாடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வெங்கட்:
இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜீவா வெங்கட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெங்கட் தன் மகளுடன் செம ஜாலியாக விளையாடி வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ஷூட்டிங் காரணமாக நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கட் வெளியாகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.