நேத்து வரை எப்படி இருந்த சித்ராவா இது - மார்சுரயில் இப்படி. சோகத்தில் ஆழ்த்திய வீடியோ.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வருகின்றனர்.
இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.
இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நடிகை சித்ராவுடன் தங்கி இருந்த வருங்கால கணவர் ஹேமந்த் தான் சித்ரா இறந்த போது உடன் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
https://twitter.com/sivakubendiran/status/1336669561039405056
அதே போல சித்ரா இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவிற்கும் கோழையான பெண் கிடையாது என்றும் அவருடன் பணியாற்றிய பலரும் கூறி வருகின்றனர். சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் சித்ராவின் உடல் மார்சுவரியில் இருக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. நேற்று வரை சந்தோசமாக இருந்த சித்ராவை இப்படி பார்க்கும் போது ரசிகர்கள் அனைவரும் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர்.