நமக்கு அம்மா ஆகுற தகுதி இல்லையா?ன்னு அழுதேன் - கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பனிமலர்

By subhashini · 20/6/2024

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சந்தோசத்தில் பனிமலர் பன்னீர்செல்வம் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல செய்தி வாசிப்பாளர்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர். செய்தி வாசிப்பாளரான பனிமலர் கோயம்புத்தூரில் பிறந்தவர்.

பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். பின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இவர் ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அது விண்வெளி ஆராய்ச்சிகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சி. இது ஒரு பக்கம் இருக்க, இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.

பனிமலர் குறித்த தகவல்:

மேலும், சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்ததால் ஹீரோயினி ரேஞ்சுக்கு இவருக்கு கடைதிறப்பு விழா விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகியும் இவருக்கு குழந்தை இல்லை. இது குறித்து பலரும் கேட்டிருக்கிறார்கள். இது பனிமலரை அதிகம் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வீடியோ பதிவிட்டு தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பனிமலர் பதிவு:

அதில் அவர், டார்லிங்ஸ், தவமாய் தவமிருந்து நான் அம்மா ஆகப்போறேன். சீக்கிரம் 2 பாப்பா பெத்துக்கணும்ல ஆரம்பிச்சு,பாப்பா பெத்துக்கணும், பாப்பா எப்பதான் பெத்துக்குறது? பாப்பாவே பொறக்காதா? நமக்கு அம்மா ஆகுற தகுதி இல்லையா? மத்த மாசமா இருக்குற பெண்களை, குட்டிக் குழந்தைகளைப் பாத்தாலே(சத்தியமா மிகைப்படுத்தல social media ல பாத்தாலே) அழுகை வந்துடும். பாப்பாவே வேண்டாம், நமக்கு பாப்பாவே பொறக்காதுல வந்து நின்னுடுச்சு மனசு.

View this post on Instagram

A post shared by Panimalar Panneerselvam (@panimalar_panneerselvam)

கர்ப்பமாக இருக்கும் பனிமலர்:

என்ன நானே சமாதானப்படுத்திக்கத்தான் ராக்கி, மோனா அவுங்ககிட்ட அம்மா அம்மானு சொல்லும்போதும், அவுங்க என்ன தேடும்போதும், கொஞ்சும்போது ஒரு அற்ப சந்தோசம் என் புள்ளைகனு, நானும் ஒரு அம்மாதான்னு.
அவ்ளோதான் இப்டியே உள்ளதவச்சு சந்தோசப்பட்டுகணும்னு எல்லாதுல இருந்தும் விலகி நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு இருக்கும்போது எல்லாமே தலைகீழா மாறுச்சு, நினைக்காத விசயங்கள் எல்லாம் நடந்துச்சு.
குழந்தைக்கு முயற்சிக்கும்போதும் 1% நம்பிக்கைகூட இல்ல, எனக்கு குழந்தை பிறக்கும்னு, இப்பவரைக்கும் முழுமைய நம்பமுடியல.

குழந்தை குறித்து சொன்னது:

இது கனவா, நிஜமா நடக்குதானு. Scan-ல பாப்பாவோட இதயத்துடிப்ப கேக்கும்போதெல்லாம் கதறி அழுவேன், அதுக்காகவே ரொம்ப நேரம் காட்டுவாங்க. அப்ப மட்டும் உண்மைதான்போலனு தோணும். ஆரம்பத்துல இருந்து பாக்குறவுங்களுக்கு தெரியும் என் வாழ்க்கை எப்பயும் சுலபமானதா இல்ல, அது அடிச்ச அடிலதான் நான் இந்த நிலமைல இருக்கேன், இப்பவும் எவ்ளவோ பாரங்களோடதான் இந்த பயணத்தை தொடர்ந்துட்டிருக்கேன். சத்தமா கத்தி சொல்றேன் “ I’M PREGNANT“. எனக்குள்ள ஒரு பாப்பா இருக்கு. உங்க அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி

Tamil Behind Talkies AMP · Quick view
View full