விழாவில் சூரி அண்ணன் இதை செய்வார் என்று நான் நினைக்கவில்லை - நெகிழ்ச்சியில் DJD பஞ்சமி சொன்னது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம். தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ லோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி சரத்குமார் இருக்கிறார். இவருடன் சினேகா, வரலக்ஷ்மி சரத்குமார், பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி இருப்பவர் தான் பஞ்சமி. இவர் மணிகண்டன் என்பவரை திருமணம் செய்து 3 மகன்களுக்கு தாயாக இருக்கிறார்.
இந்த வயதிலும் இவர் விடாமுயற்சியினால் சூப்பராக நடனமாடி வருகிறார். ஒவ்வொரு வாரமும் இவருடைய நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியிலும் பாராட்டுகள் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் மாமன் படத்தின் ப்ரமோஷனுக்காக சூரி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது பஞ்சமி நிகழ்ச்சியில் தன்னுடைய மகன்களுக்கு இன்னும் மொட்டை அடித்து காது குத்த வில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி அழுது இருந்தார். உடனே சூரி, நான் உங்கள் பிள்ளைகளுக்கு மாமனாக இருந்து காதணி விழா நடத்தி வைக்கிறேன் என்று நிகழ்ச்சியில் சொன்னார்.
பஞ்சமி மகன்கள் காதணி விழா:
இந்த நிலையில் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக பஞ்சமியின் உடைய மூன்று மகன்களுக்குமே தாய் மாமனாக இருந்து சீர்வரிசை கொடுத்து காதுகுத்தும் நிகழ்ச்சியை சூரி சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில் சூரி உடன் மாமன் படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பங்கேற்று இருந்தார். பின் பஞ்சமியின் மகன்கள் உடைய படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார்கள்.
சூரியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பஞ்சமி, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சூரி அண்ணன் மடியில் வைத்து எங்களுடைய குழந்தைகளுக்கு காது குத்தி இருக்கோம்.
பஞ்சமி பேட்டி:
நல்லபடியாக இந்த காதணி விழா நடந்து முடிந்தது. அண்ணன் என்ற உறவில் சூரி இன்று இங்கு வந்திருக்கிறார். எனக்கு ஒரு தம்பி இருக்கான். எனக்கு அப்பா இல்லை. அதனால் அவன் தான் முன்னாள் நின்று பண்ண வேண்டும். இந்த நிலைமையில் எங்களால் ஒரு விழாவை நடத்த முடியுமா? என்று தெரியாமல் இருந்தோம். சூரி வந்து நடத்திருக்கிறார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று தெரிந்து தாய் மாமனுக்கு ஆன இடத்தை கொடுக்க வேண்டும் என்று சூரி என்ன செய்த விஷயம் விஷயம் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. என் தம்பியுமே அவர் மடியில் பசங்களை உட்கார வைக்கலாம் என்று சொன்னார். சூரி அண்ணன் இப்படி ஒரு விஷயத்தை செய்து ரொம்பவே சந்தோஷம். அது மட்டும் இல்லை மாமன் படத்தோட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் சாரும் என்னுடைய குழந்தைகளோட படிப்பு செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=RcR3ViHC8iU
சூரி பற்றி சொன்னது:
உறவுகளாக வந்து எல்லோருமே எத்தனை விஷயங்கள் செய்திருக்கிறார்கள். முதல் முறையாக சரத்குமார் சார் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தபோது என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஸ்கூல் பீஸ் கட்டினேன். அதுவரைக்கும் ஸ்கூல் பீஸ் எப்படி கட்டுவது என்று தினமும் கடவுளிடம் அழுது கொண்டிருந்தேன். அவர் கொடுத்த ஒரு லட்சம் எனக்கு ரொம்ப பெரிதாக இருந்தது. வரலட்சுமி மேடம் குழந்தைகளோட படிப்பு செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார். நீ நல்லா டான்ஸ் மட்டும் ஆடு. அதில் கவனம் செலுத்து என்று சொன்னார். பின் 3 பிள்ளைகளும் படிப்பு ரொம்பவே முக்கியம். ஏன்னா எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விஷயம் நடக்கவே இல்லை. என் மூணு பிள்ளைகளையும்
ஒழுக்கத்துடன் நல்லா வளர்த்திட வேண்டும்.
மணிகண்டன் பேட்டி:
கடவுளிடம் எத்தனையோ நாள் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிற என்று அழுது இருக்கிறேன். இன்றைக்கு இவ்வளவு சந்தோசங்களையும் நான் அனுபவிக்கிறேன். ஆனால், அந்த சந்தோஷத்தை முழுமையாக கொண்டாடுவோம் எனக்கு பயமாக இருக்கு. இத்தனைக்கும் காரணம் நான் தான் என்று என்னுடைய கணவர் சொல்லுவார். ஆனால், என் குடும்பம் தான் எல்லாத்துக்கும் காரணம். முக்கியமாக என் கணவர் தான் அத்தனைக்கும் காரணம் என்று கூறியிருந்தார். பின் பஞ்சமி கணவர் மணிகண்டன், பஞ்சமிக்கு டான்ஸ் மேல் ரொம்ப ஆர்வம் இருக்கு என்று தெரிந்த போது இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காரணம் பஞ்சமியின் திறமை தான். மணிகண்டன் ஓட மனைவி பஞ்சமி என்ற விஷயம் மாறி இப்போது பஞ்சமியோட வீட்டுக்காரர் மணிகண்டன் என்று சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது. பஞ்சமி முதன்முதலில் நடனமாட போறார் என்றவுடன் எல்லோரும் கிண்டல் கேலி விமர்சனம் செய்தார்கள். இன்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது மனிதரோட இயல்பு தானே என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.