ராகுல் என்ற சிறுவன் பேச்சை கேட்டு ஏதோ செய்தது - யார் அந்த சிறுவன்? அவர் பேசியது என்ன தெரியுமா?

By subhashini · 20/1/2025

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ராகுல் என்ற சிறுவன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய, மாநிலகள் அரசு அறிவித்து இருந்தது. இந்த விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள் தேவைப்படுகிறது.

குறிப்பாக, பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும், நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த மத்திய, மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரந்தூர் உட்பட 12 கிராம மக்களுமே புது சர்வதேச விமான நிலையம் வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனை எதிர்த்து 910 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரந்தூர் விமான நிலையம் சர்ச்சை:

இதை அடுத்து இன்று பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிவரும் மக்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், ராகுல் என்ற சிறுவனுடைய வீடியோவை பார்த்தேன். அது என்னை ஏதோ செய்தது. அதற்காகத்தான் இங்கு வந்தேன். உங்களோடு நான் நிற்பேன். விவசாயிகளுடைய காலடி மண்ணை தொட்டு தான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் என்னுடைய கள அரசியல் பயணமும் இங்கிருந்து தொடங்கி இருக்கிறது.

https://www.youtube.com/live/Vmk6EZBhAus?si=jNNQ7sygBzZP5P3U

விஜய் பேச்சு:

இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் கிராம தேவதைகளான எல்லையம்மன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களோடு உறுதியாக நிற்பேன். போராட்ட திடலில் உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால், அதற்கு தடை விதித்தார்கள். சமீபத்தில் துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. விமான நிலையத்தை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதே நிலைப்பாடு உடன் மக்கள் இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள் தான்.

விவசாயம் பற்றி சொன்னது:

விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானத்தில் பரந்தூர் பகுதியில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ள காடாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நான் மாநாட்டிலேயே வலியுறுத்தி இருந்தேன். விவசாயிகளுக்கு ஆதரவாக சட்ட போராட்டத்தை நடத்தவும் நான் தயங்க மாட்டேன். இந்த பிரச்சனையில் நான் உங்களுடன் தான் உறுதியாக நிற்பேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. இந்த இடத்துக்கு ஏர்போர்ட் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன் என்று ரொம்ப ஆவேசமாக விஜய் பேசி இருந்தார்.

ராகுல் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் விஜய் சொன்ன ராகுல் என்ற சிறுவன் அளித்த பேட்டியில், எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். ஏரி, பள்ளி, விவசாயம் தான் வேண்டும். விமான நிலையம் வந்தால் ஏரி, பள்ளி எல்லாம் பாதிக்கப்படும். அவர்கள் பசங்க மட்டும் படித்து பெரிய ஆளாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாங்கள் படித்து பெரிய ஆளாக வேண்டாமா? பள்ளியை அழித்துவிட்டால் எங்களால் எப்படி படிக்க முடியும், ஏரிகளை அழித்து விட்டால் நாங்கள் எங்கு போவது? இங்கு தான் நாங்கள் விளையாடுவது, வெயில் காலத்தில் எங்களுக்கு ஏறி ரொம்ப முக்கியம். விவசாயம் அழிந்துவிட்டால் நாங்கள் எப்படி சாப்பாடு முடியும் என்று பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full