அந்த படத்துக்கு பிறகு அப்பாவ பற்றிய கேள்வி குறைந்தது - பராசக்தி பட நடிகர் ப்ரித்வி ராஜன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய நூறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் புறநானூறு படையில் முக்கிய நபராக நடித்து இருப்பவர் ப்ரித்வி ராஜன். இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக அவர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். ப்ளூ ஸ்டார் படத்தை தொடர்ந்து இவருக்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பராசக்தி படம்:
இவர் வேற யாரும் இல்லை பிரபல நடிகர், இயக்குனருமான பாண்டியராஜன் மகன் ஆவார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ப்ரித்வி ராஜன், நான் சுதா மேமுடைய பெரிய ரசிகன். அவருடைய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் இந்த படத்தில் சூர்யா சார் நடிப்பதாக இருந்தபோதே நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். அதற்குப் பிறகு எந்த ஒரு ரிப்ளையும் அவர்களிடம் இருந்து வரவில்லை. ப்ளூ ஸ்டார் ரிலிஸ்க்கு பிறகு எனக்கு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். சிவா சார் படத்துக்குள் வந்ததுக்கு பிறகு தான் எனக்கு மறுபடியும் கால் வந்தது.
ப்ரித்வி ராஜன் பேட்டி:
என்னுடைய கதாபாத்திரம் எஸ்கே சார் உடனே ட்ராவல் செய்யும். புரட்சிகளை செய்யும் என்னுடைய கதாபாத்திர வசனங்களை எல்லாம் ட்ரைலரில் பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டி இருந்தார்கள். சுதா மேமுக்கு என்னுடைய தோற்றம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் நான் மேக்கப் செய்யக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இந்தப் படத்திற்கான டப்பிங் பணியில் நான் என்னுடைய பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். மதுர வட்டார வழக்கு பேச சொன்னார்கள். என்னுடைய வசன உச்சரிப்பில் அந்த வட்டார வழக்கில் கச்சிதம் இருக்கனும் என்று எனக்கு சொல்லிவிட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=N8jNWFti3Yw
படம் பற்றி சொன்னது:
இந்த படத்தில் எஸ்கே சாருடன் இணைந்து நான் டான்ஸ் ஆடினதில் ரொம்ப சந்தோசம். மேலும், ஸ்டார் கிட்ஸ் என்றாலே மட்டம் தட்டுவார்கள். ஆனால் அதற்கு பின்னாடியும் பயங்கரமான உழைப்பு இருக்கும். நானும் சாந்தனமும் இத்தனை வருடம் அதற்காக உழைத்தோம். சாந்தனு ஒவ்வொரு படத்திற்காகவும் ரொம்பகஷ்ட ப்பட்டு உழைப்பார். சொல்ல போனால் ப்ளூ ஸ்டார் படத்தோட ரிலீஸுக்கு பிறகுதான் என்னுடைய அப்பாவை பற்றிய கேள்வி குறைந்தது. அதற்கு முன்பு வரை முப்பது நிமிடம் பேட்டிகளில் 20 நிமிடம் என்னுடைய அப்பாவை பற்றி தான் பேசுவார்கள். அது இப்போ மாறி இருக்கிறது. இந்த 20 வருடத்தில் என்னுடைய சின்ன சாதனையாக இதை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.