பரிமளா அண்ட் கோ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பரிமளா அண்ட் கோ படத்தின் முதல் நாள் வசூல்

By subhashini · 6/6/2026

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பரிமளா அண்ட் கோ. இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஸ்கின், சஞ்சனா, சாண்டி, அனந்திகா, யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை GKM தமிழ் குமரன் (தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ்) மற்றும் பாண்டிராஜ் (பசங்க ஃபிலிம்ஸ்) இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தான் இந்தப் படத்தை வெளியிட்டார்.

இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். காமெடி கலாட்டாவில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது . இந்த நிலையில் பரிமளா அண்ட் கோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, படம் வெளியாகி முதல் நாளில் இந்திய அளவில் 1.84 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலக அளவில் இரண்டு கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பரிமளா அண்ட் கோ :

படத்தில் ஜெயராம்- ஊர்வசி இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சஞ்சனா, இரண்டாவது மகள் அனந்திகா. ஹீரோ ஜெயராம் வரவு செலவு கணக்குகளை எல்லாம் பார்த்து மிச்சம் பிடித்து வாழும் மிடில் கிளாஸ் ஃபேமிலி மேனாக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் ஜெயராம் உடைய இளைய மகள் அனந்திகாவுக்கு காதல் தொல்லை கொடுத்து சாண்டி தொந்தரவு செய்கிறார்.

படத்தின் கதை:

ஜெயராம் வீட்டிற்கு வந்தே சாண்டி தொல்லை செய்து கொண்டிருக்கிறார். ஜெயராம் குடும்பம் தெருவில் வரும் போதும், வீட்டுக்கு வந்தும் அத்துமீறி நடந்து கொள்கிறார் சாண்டி. அது மட்டும் இல்லாமல் ஜெயராம் குடும்பம் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதனால் சாண்டியை கொலை செய்து விடலாம் என்று ஜெயராம் குடும்பம் முடிவெடுக்கிறார்கள். இவர்கள் சொன்னது போலவே சாண்டியை கொலை செய்து விடுகிறார்கள்.

போலீஸ் தீவிரமாக குற்றவாளியை தேடுகிறார்கள். கடைசியில் சாண்டியை கொலை செய்தது யார்? ஜெயராம் குடும்பம் பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? அதற்கு பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஜெயராம்- ஊர்வசி இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவரின் காம்போ அட்ராசிட்டி. போதை பழக்கத்தால் சீரழிந்து போகும் இளைஞர் சமுதாயத்தை பற்றியும், அதனால் எத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் இயக்குனர் சொல்லி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

behindtalkies AMP · Quick view
View full