க்ரவுட் ஃபண்டிங்கில் 6 கோடி ஏமாந்தது எப்படி? குற்றவாளி யார்? மனம் திறந்த பரிதாபங்கள் கோபி - சுதாகர்
க்ரவுட் ஃபண்டிங்கில் நடந்த முறைகேடு குறித்து மனம் திறந்து பரிதாபங்கள் கோபி- சுதாகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் பரிதாபங்கள் என்ற சேனலை தொடங்கி பல்வேறு விதமான கண்டட் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர்கள் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.
பின் அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் யூடியூபில் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி இருந்தார்கள். இந்தளவிற்கு மக்கள் மத்தியில் இவர்களை ரசிக்க வைத்ததற்கு காரணம், அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்களுடைய பாணியில் நகைச்சுவை கலந்து கொடுத்து வருகின்றனர் கோபி மற்றும் சுதாகர். இதன் மூலம் இவர்கள் சில படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபி-சுதாகர் சேனல்:
இப்படி இருக்கும் நிலையில் படம் எடுப்பதாக கூறி ஆறு கோடி ரூபாயை பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஏமாற்றி இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள், பார்வையாளர்களிடம் படம் தயாரிக்கப் போவதாக சொல்லி க்ரவுட் ஃபண்டிங் மூலம் 25 ஆயிரம் பேரிடம் இருந்து ஆறு கோடி ரூபாய் வரை பணம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், சொன்னபடி அவர்கள் படம் எடுக்கவில்லை. அதற்கான விஷயங்களும் செய்யவில்லை.
கோபி-சுதாகர் மீதான சர்ச்சை:
இதனால் பல விமர்சனங்கள் கோபி-சுதாகர் மீது எழுந்தது. இவர்கள் மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பரிதாபங்கள் கோபி-சுதாகர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்கள். அதில், கிரவுட் ஃபண்டிங்கில் பணம் வசூலிப்பது, அதை நிர்வகிக்கும் பொறுப்பை பிரவீன் ஜெயக்கொடி என்பவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் வசூல் தொகை, கணக்கு வழக்குகள் எல்லாம் முறையாக பிரவீன் ஜெயக்கொடி இயக்கி வந்திருக்கிறார்.
கோபி-சுதாகர் பேட்டி:
பின் அந்த நபர் நாட்கள் போக போக பொதுமக்கள், நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு கோபி சுதாகரை ஏமாற்றி இருக்கிறார். மூன்று வருடங்கள் 30 லட்சம் ரூபாயை மட்டும் படப்பிடிப்பில் செலவு செய்ததாக காண்பித்து மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் கோபி- சுதாகர் இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அந்த பிரவீன் தேவையில்லாத முறை கேடு செய்து போலீசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் தான் இவர்களுக்கு தாங்கள் ஏமாந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து பிரவீன் ஜெயக்கொடி மீது போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=rAuaWq_7Rd4
கோபி-சுதாகர் கொடுத்த விளக்கம்:
பின் தாங்கள் ஏமாற்றப்பட்டது ஒரு பக்கம் இருந்தாலும், கிரவுட் ஃபண்டிங்கில் பணம் கொடுத்த பொதுமக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக பரிதாபங்கள் யூடியூப் சேனல் வருமானத்தை வைத்து பணத்தை கொடுத்து இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே கோபி, சுதாகரிடம் இருந்து பணத்தை பெற்றிருக்கிறார்கள். மீதம் உள்ளவர் இவர்களுடைய நிலைமையை அறிந்து படம் எடுக்க உதவி செய்திருக்கிறார்கள். இன்னும் சிலர், வெகுமதியாக இருக்கட்டும் என்று கொடுத்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் எடுக்கும் படத்தினுடைய பணி 90 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் முடிவடைய இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள்.