எங்கள் வீட்டு கிருஷ்ணன் - முதன் முறையாக தனது மகனை காட்டிய பரிதாபங்கள் சுதாகர்.

By Arun · 8/9/2023

சமீப காலமாகவே சோசியல் மீடியா மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். நடிப்பதற்கு சோசியல் மீடியா ஒரு பிளாட்பார்ம் ஆக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா நடிப்பதற்கு வாய்ப்புகள் மட்டுமின்றி பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகை செய்கிறது. மேலும், சமூக வலைத்தளங்களின் மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=uAkh3SQ28zA

அந்த வகையில் யூடியூபில் வீடியோ போடுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்களின் சேனல் இளைஞர் ரசிகர்களை கொண்டவர்கள் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இவர்கள் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.

பின் அங்கு அவர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் யூடியூபில் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி இருந்தார்கள்.மேலும், அதில் அவர்கள் வீடியோக்களை போட்டு வந்தார்கள். அது மக்கள் மத்தியில் பிரபலமாக ஆனது. அதோடு இந்தளவிற்கு மக்கள் மத்தியில் இவர்களை ரசிக்க வைத்ததற்கு காரணம், அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளை தங்களுடைய பாணியில் நகைச்சுவை கலந்து மக்கள் கொடுத்து வருகின்றனர்.

இதை இவர்கள் தங்கள் நண்பர்களோடு இணைந்து செய்து வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் சில படங்களிலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே மாதிரி இவர்கள் சொந்தமாக படம் இயக்கும் கனவை நனவாக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கினார்கள். இதற்காக தங்கள் சேனல் சந்தாதார்களிடன் இருந்து பணத்தையும் பெற்றனர். பல ஆண்டுகள் ஆகியும் படத்தின் எந்த அறிவிப்பும் வரவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டதாக தங்கள் சேனலில் அறிவித்தனர். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு சுதாகருக்கு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கோபிக்கு திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் மாதம் கோபிக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருந்தது.

View this post on Instagram

A post shared by SUDHAKAR (@parithabangal__sudhakar)

இது குறித்து கோபி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து அதில் "தகப்பனானேன்.. அழகிய மகள் பிறந்துள்ளாள்' என்று பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் திருமணம் சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகனுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்ந்துள்ளார். தனது மகனை கையில் ஏந்தியவாறு சுதாகர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full