முக்கியமான காட்சியில் அறிமுக நடிகராக நடித்த பார்த்திபன் - சிவாஜி கேட்ட அந்த ஒரு கேள்வி. வீடியோ இதோ.
சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் குறித்து பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பார்த்திபன். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.
பார்த்திபன் திரைப்பயணம்:
அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து பார்த்திபன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். பல பேரின் கனவான 70 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் :
இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் இறுதியில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இதனை அடுத்து பார்த்திபன் அவர்கள் படம் இயக்குவதிலும், நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பார்த்திபன் அளித்த பேட்டி:
இந்த நிலையில் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், சிவாஜி கணேசனுடன் நடித்த அனுபவம் குறித்து கூறி இருந்தது. பாக்யராஜ் சாரிடம் நான் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தேன். அப்போது அவர் இயக்கிய படங்களில் ஒன்று தாவணி கனவுகள். அந்த படத்தில் சிவாஜி கணேசன் சார் நடித்திருந்தார். அதில் போஸ்ட்மேன் வேடத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அந்த போஸ்ட்மேன் ஒரு நீளமான டயலாக் சொல்லணும். அதனால் சிவாஜி சார் விசாரித்தார்.
https://twitter.com/chettyrajubhai/status/1597554451157745665
சிவாஜி குறித்து சொன்னது:
பின் என்னை அவர் அழைத்து, தம்பி சரியாக பேசி விடுவாயா? நீ சொல்லி முடித்த பிறகு என் வாயிலிருந்து ரத்தம் கொட்ட வேண்டும். நீ சரியாக டயலாக் சொல்லவில்லை என்றால் நான் மீண்டும் கோபிசெட்டிபாளையம் சென்று உடைமாற்றி வருவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். இது எல்லாம் தேவையா என்று யோசித்துக் கொள் என்று சொன்னார். அப்படி அவர் சொல்லும் போது என் உள்ளுக்குள்ள நடுக்கமாக இருந்தது என்று கூறியிருந்தார்.