சேரி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய பிரகிடா, தியேட்டருக்கு அழைத்து சென்று பார்த்திபன் செய்த செயல். கண்ணீர் விட்ட பிரிகிடா.

By Rajkumar · 18/7/2022

சமீபத்தில் இரவின் நிழல் படம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்த போது சேரியை குறிப்பிட்டு தான் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் பிரிகிடா. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

https://twitter.com/AnAmbedkarite/status/1548556626344308736

இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்து இருப்பார். இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். மேலும், நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் பிரகிடா.

இளசுகளை கவர்ந்த பிரிகிடா :

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் பிரகிடா நடித்து அசத்தியிருப்பார். பின் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். அதோடு இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/CheSanthosh/status/1548591728180862977

இரவின் நிழல் படம்:

தற்போது இரவின் நிழல் படத்தில் இவர் தான் மெயின் லீடாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல். நிர்வாண காட்சியில் பிரிகிடா நடித்தது பலரையும் வியப்படைய செய்து இருக்கிறது.

சர்ச்சையை கிளப்பிய பிரிகிடாவின் பேச்சு :

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் இரவின் நிழல் படம் குறித்து பேசிய பிரிகிடா, “இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பிரகிடா போட்ட பதிவு :

அந்த வார்த்தைகளை சொன்னதற்கு நான் மனமார வருந்துகிறேன்! இரவின் நிழல் படத்தில் லொகேஷன் மாறும்போது, ​​மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன், அதைச் சொன்னதற்காக நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொளுங்கள். சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு சாதாரண பெண் என்று பதிவிட்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=EiCrxlOxeRA

பிரகிடாவிற்காக மன்னிப்பு கேட்ட பார்த்திபன் :

பிரிகிடாவின் இந்த பதிவிற்கு கமன்ட் போட்டுள்ள பார்த்திபன் 'Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே' என்று பதிவிட்டு இருக்கிறார். அதே போல திரையரங்கில் பிரகிடா, அந்த வார்த்தையை தெரியாமல் பேசிவிட்டார் என்றும் அவர் சார்பாக தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி இருக்கிறார் பார்த்திபன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full