கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மக்களும், அரசாங்கமும் கவலையில் உள்ளவர்கள். இந்த கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சலூன் கடை மகன் நேத்ராவின் சேவைகளைப் பாராட்டி நடிகர் பார்த்திபன் அவரின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன்.

ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் மதுரை அருகில் உள்ள நெல்லைதோப்பு பகுதி முழுவதுமே கொரோனாவால் பாதிப்பட்டு முடக்கப்பட்டது. இதனால் அதிகம் தினக்கூலி வேலை செய்யும் மக்கள் தான் பாதிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் வாழும் மக்களின் கஷ்டங்களை அறிந்து சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்கள். இந்நிலையில் தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தார் சலூன் கடை மோகன். அந்த பணத்தை அவரது மகள் நேத்ரா கஷ்டப்படும் மக்களுக்கு உதவ சொன்னார்.

Advertisement

அந்த மொத்த பணத்தையும் அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் என தேவையானவற்றை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார். இந்த செய்தியை அறிந்த நடிகர் பார்த்திபன் அவர்கள் நேத்ராவை பாராட்டி சோசியல் மீடியாவில் கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, நீங்கள் செய்த இந்த உதவி என்னை பெரிதாக பாதித்தது. அதனால் எனது நண்பர் சுந்தர் மூலம் நான் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது பாராட்டை பகிர்ந்துக் கொண்டேன்.

மேலும், நீங்கள் அதிக பணம் வைத்து இருப்பவர்கள் இல்லை என்றாலும் உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டு புடவை, அங்கவஸ்திரம், கிரீடம், இனிப்புகள், பழங்கள், என அனைத்தையும் என் நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி என் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன். அதுமட்டும் இல்லாமல் நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளி படிப்புக்குரிய அனைத்து செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement