ஒரே நடிகர வச்சி எடுத்தாச்சு, ஒரே ஷாட்லையும் எடுத்துச்சி - பார்த்திபனின் அடுத்த வித்யாசமான முயற்சி என்ன தெரியுமா ?

By Arun · 19/7/2022

இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டு திகழ்கிறார். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இறுதியாக இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதற்காக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் தேசிய விருதும், சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது. அதோடு ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை நடிகர் அபிஷேக்பச்சனை வைத்து பார்த்திபன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல்:

தற்போது பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் தான் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தில் நந்து என்பவர் சினிமா பைனான்சியர். இவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவரை போலீசார் கைது செய்ய துரத்தி வருகின்றனர். போலீசில் சிக்காமல் தன்னை துரத்தி கொள்ள போலி சாமியார் ரோபோ சங்கரின் உதவியை நாடுகிறார்.

படத்தின் கதை:

அங்கே என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது ? எல்லாம் முடிந்து மீதமிருக்கும் எதிரிகளை முடித்து தள்ள முடிவு எடுக்கும் தருணத்தில் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறார். நந்துவின் வாழ்வில் நந்துவாக பலர் வந்து போகிறார்கள். நந்துவின் வாழ்க்கையில் வரும் பெண்கள் செய்யும் நல்லது, கெட்டது. கடைசியில் நந்துக்கு என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பார்த்திபன் இயக்கும் அடுத்த படம்:

மேலும், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 4 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பார்த்திபன் ஒரு புது படம் எடுக்கிறார். அதில் மனிதர்களே இல்லை. முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் ஆச்சரியத்தில் வாய் பிளந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் குறித்து அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full