மத்திய அரசு அவசரமாக அணுக அஜித் போன் நம்பர் கேட்டாங்க, நான் தான் கொடுத்தேன் - நெகிழ்ச்சியில் நடிகர் பார்த்திபன்

By subhashini · 26/1/2025

அஜித்திற்கு பத்மபூஷன் விருது கிடைத்ததை ஒட்டி நடிகர் பார்த்திபன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90s காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

தற்போது கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்தி வருவதாற்காக அஜித்குமாருக்கு மத்திய அரசால் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அஜித், குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை மோடி தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்மபூஷன் விருது:

நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட முறையில் எனக்கானது மட்டுமல்ல. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் அடங்கும் என்பதை உணர்வேன். எனது மதிப்பிற்குரிய திரைத்துறையினர், திரைத்துறை முன்னோடிகள், எனது நண்பர்கள் உட்ப அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் உத்வேகம், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு ஆகியவை எனது பயணத்தில் உறுதுணையாக இருந்ததோடு எனக்கு விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த உதவியது.

அஜித் பதிவு:

இந்த கெளரவத்திற்கும், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கும் அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும் ஆர்வத்துடனும் தொடர்ந்து செயல்பட நான் உறுதிபூண்டுள்ளேன். என்னுடைய பயணத்தில் நான் உற்சாகமாக உறுதிபூண்டுள்ளேன். உங்கள் அனைவரது பயணமும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள்! நன்றியுடன் அஜித் குமார் என்று கூறி இருக்கிறார். மேலும், அஜித்துக்கு பத்மபூஷன் அறிவிக்கப்பட்டது அடுத்து பிரபலங்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban)

பார்த்திபன் பதிவு:

இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நண்பர் அஜித்குமாரின் எண் கேட்க, ஏன்? கேட்டேன். மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன். ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது. Congratulations அஜித்குமார் என்று கூறி இருக்கிறார்.

அஜித் கார் ரேசிங்:

அஜித்- பார்த்திபன் இருவரும் இணைந்து நீ வருவாய் என்ற படத்தில் நடித்திருந்தார்கள். உன்னை கொடு என்னைத் தருவேன் என்ற படத்தில் அஜித் நடித்திருந்தார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பார்த்திபன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் அஜித் நடிப்பை தாண்டி கார் ரேசிங் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே. இவர் சினிமாவில் நுழையும்போது இருந்தே கார் ரேஸ்ங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட துபாயில் நடந்த '24H' கார் பந்தயத்தில், 991 பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full