அஜித் படத்தில் நடித்தும் அஜித்தை நேரில் சந்திக்காத பார்த்திபன் - அவர் சொன்ன ரோஜா கதை.

By Rajkumar · 17/6/2020

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் வல்லவர் பார்த்திபன். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த இவருடைய செருப்பு சைஸ் 7” மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் அஜித் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அஜித், பார்த்திபன் இருவரும் இணைந்து நீ வருவாய் என படத்தில் நடித்துள்ளார்கள்.

ராஜகுமாரன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நீ வருவாய் என. இந்த படத்தில் பார்த்திபன், தேவயானி நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அஜீத் நடித்து இருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, அஜித் பவர்ஃபுல் ஆக்டர்.

சமீபத்தில் அவரை நான் எங்கேயும் பார்க்கவில்லை. பெரும்பாலும் அஜித் விழாக்களுக்கும் வருவதில்லை. ஆனால், அவரை நேரில் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. அதோடு நாங்கள் இருவரும் நடித்த 'நீ வருவாய் என' படத்தின் ஷூட்டிங் நேரத்தில் நாங்கள் நேரில் சந்தித்ததே இல்லை. மேலும், ஒரே ஒரு நாள் போட்டோஷுட்டாக மட்டும் தான் நாங்கள் சந்திதோம்.

கைகுலுக்குறது, ரோஜாப்பூ கொடுத்துக்குறதுனு அந்த நாள் போச்சு அவரோட படம் பண்ண நல்ல ஸ்கிரிப்ட் அமையும். அதுக்கான வாய்ப்பும் அமையும். அதற்காக நான் காத்து கொண்டு இருக்கிறேன். நேர்கொண்ட பார்வை படத்தில் நண்பர் அஜித்தோட பர்ஃபாமென்ஸ் வேற லெவல். வசனங்களைவிட அவரோட கூர்மையான கண்கள் ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது. அவரை வைத்து படம் பண்ண வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full