ஸ்கொயராக சொல்லல ரவுண்டாக சொல்கிறேன் - பொன்னியின் செல்வன் மேடையில் GSquare குறித்து நக்கல் செய்த பார்த்திபன்.

By subhashini · 27/4/2023

ஆயிரம் கோடி வேணும் என்றால் பொன்னியின் செல்வன் 2 படம் பார்க்க பாருங்கள் என்று பார்த்திபன் நக்கலாக பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பலரும் அதிகம் எதிர்பார்த்து வருகிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் வெளியீட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த படத்தின் விளம்பரப் பணியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

https://www.youtube.com/watch?v=rm9KZ1xOuTs&t=154s

படம் குறித்த தகவல்:

நாளை உலகம் எங்கும் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில்
பத்திரிகையாளர்களை சந்தித்து பட குழுவினர் பேட்டி அளித்திருக்கிறார்கள். அப்போது பார்த்திபன் கூறி இருந்தது, மணி சாரின் உதவியாளர் பொன்னியின் செல்வன் குறித்து பேசியது ரொம்ப வைரல் ஆனது. அதேபோல் இந்த சந்திப்பிலும் ஏதாவது பேசுங்கள் என்று சொன்னார். இந்த படத்திற்காக படக்குழு செய்த புரமோசனை விட வேற ஏதாவது ஒன்றை வைரலாக்க சொல்ல முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. தற்போது வைரலாக இருப்பது என்று சொன்னால் வருமானவரித்துறை நடத்திவரும் சோதனை தான்.

பார்த்திபன் அளித்த பேட்டி:

நாளையிலிருந்து எங்காவது ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரித்துறை கைப்பற்ற வேண்டும் என நினைத்தால் ஸ்கொயராக சொல்லவில்லை ரவுண்டாக சொல்கிறேன். அதற்கு அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடும் திரையரங்குக்கு சென்றால் கைப்பற்றி விடலாம். நிச்சயமாக இந்த வாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்த படம் செய்யும். மணிரத்தினம் இந்த திரைப்படத்திற்காக அந்த அளவிற்கு உழைப்பை போட்டு இருக்கிறார் என்பதை சொல்வதை விட படத்தின் ப்ரோமோஷனலாக வார்த்தைகளை கொட்டி இருக்கிறார் என்று கிண்டலும் கேளியமாக பார்த்திபன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full