பா.ரஞ்சித் சொன்ன வார்த்தை, டீன்ஸ் படத்தில் சாதி சம்மந்தப்பட்ட காட்சியா? சர்ச்சைகளுக்கு பார்த்திபன் கொடுத்த விளக்கம்

By subhashini · 10/7/2024

'டீன்ஸ்' படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இயக்குனர் பார்த்திபன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய வித்தியாசமான கதையின் மூலம் தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் எப்போதும் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.

இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வந்த 'இரவின் நிழல்' படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டீன்ஸ்’. இந்த படத்தை பயாஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

டீன்ஸ் படம்:

ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். கடந்த மாதம் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. இந்த படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனர் சிவபிரசாத் மீது போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதில், டீன்ஸ் படத்திற்காக விஎப்எக்ஸ் காட்சிகளை உருவாக்கி தருவதற்கு 68.5 லட்சம் பேசப்பட்டு இருந்தது. இதற்கான முன் பணமாக 42 லட்சம் ரூபாயை கொடுக்கப்பட்டது. ஏப்ரல் மாதமே முடித்து கொடுப்பதாக சிவபிரசாத் கூறியிருந்தார்.

பார்த்திபன் பேட்டி:

சிவபிரசாத் முடித்து தர தாமதம் ஆனதால் பார்த்திபனும் பணத்தை தராமல் இருந்திருக்கிறார். பின் இரு தரப்பிலும் ப்ரச்சனை முற்றி பார்த்திபன் புகார் அளித்து இருந்தார். இதை அடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பா.ரஞ்சித் குறித்து இயக்குனர் பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என்னுடைய நண்பர் பா. ரஞ்சித், எங்களுடைய படங்கள் எல்லாம் ஜாதியை மையமாக வைத்து தான் இருக்கிறது.

பார்த்திபன் சொன்னது:

அதே மாதிரி உங்களுடைய 'புதிய பாதை' படத்தில் சிறுவன் ஒரு கையில் பறை இருக்கும். ஒவ்வொன்றையும் வித்தியாசமாகவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நீங்கள் சில விஷயங்களை பேசி இருக்கிறீர்கள் என்று சொன்னார். அது உண்மைதான். நான் என்னுடைய எல்லா படத்திலும் மறைமுகமாக சொல்லி இருக்கிறேன். தற்போது எடுத்திருக்கும் டீன்ஸ் படத்தில் கூட சிறுவர்கள் சென்று கொண்டிருக்கும்போது ஆவணக் கொலை சம்பந்தமான ஒரு காட்சி வரும்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

படம் குறித்து சொன்னது:

அதனால் அவர்கள் வேறு வழி சென்று விடுவார்கள். ஒருவேளை அந்த சம்பவம் நடக்கவில்லை என்றால் அவர்கள் சரியான பாதைக்கு போய் இருப்பார்கள். ஒரு பெண் அடித்து தூக்கிட்டு கொன்று விட்டு ,அந்த பாடியை கொடுத்தால் தான் இந்த பாடியை வாங்குவோம் என்று சொல்வார்கள். அப்போதே இது நடப்பது சாத்தியமா? என்பதை தான் நான் மறைமுகமாக குழந்தைகளை வைத்து சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் நிறைய அரசியல் பேசப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full