பார்த்திபனின் புதிய முயற்சி கை கொடுத்ததா? டீன்ஸ் படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

By subhashini · 13/7/2024

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் நடிகர் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கி நடித்து இருக்கும் படம் 'டீன்ஸ்'. டி. இமான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் டீன்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஒரு ஊரில் 12 சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ரொம்ப மெச்சூராக தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். சொல்லப்போனால் அவருடைய பெற்றோர்கள் அவர்களை குழந்தைகளைப் போல நடத்துவது பிடிக்கவே இல்லை. பெரியவர்களை போல நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்போது ஒரு சிறுமி, தன்னுடைய பாட்டியின் ஊரில் பேய் இருப்பதாக சொல்கிறார்.

அதையும் பார்த்துவிடலாம் என்று அந்த 12 சிறுவர்கள் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்கின்றார்கள். அப்படி செல்லும்போது வழியில் ஒரு பையனையும் தங்களுடன் இழுத்துக்கொண்டு 13 பேராக போகிறார்கள். அப்போது அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் காட்டு வழியில் பயணிக்கிறார்கள். மேலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து விடுகிறார்கள்.

இதனால் சிறுவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. அடுத்தடுத்து சிறுவர்கள் தொலைந்து கொண்டே போவதால் மற்றவர்கள் தேடுகிறார்கள். கடைசியில் என்ன ஆனது? பேய் இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தினுடைய கதையை டைட்டிலிலேயே இயக்குனர் காண்பித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சிறுவர் உடைய பெயர்களையும் ஒரு பாடலாகவே சொல்லி இருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் போல பேசும் சில விஷயங்கள் கடுப்பை ஏற்றி இருந்தாலும் சில விஷயங்கள் நன்றாகத்தான் இருக்கிறது.

முதல் பாதி அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பில் சென்றது. இரண்டாம் பாதி அவர்களுக்கு என்ன ஆனது என்ற பதட்டத்தில் இயக்குனர் வைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் கேள்வியுடன் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் சுவாரசியம் காண்பித்து இருக்கலாம். சில இடங்களில் வரும் காட்சிகள் பார்வையாளர்களை சோதித்து இருக்கிறது. மேலும், படத்தில் யோகி பாபு எதற்கு வருகிறாரே என்று தெரியவில்லை. சில காட்சிகள் சமீபத்தில் வந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தை நினைவு படுத்தி இருக்கிறது.

படத்தினுடைய சில காட்சிகள் உடைய கிராபிக்ஸ் சரியில்லை. இமான் உடைய இசையும் பெரிதாக கவரவில்லை. சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. நீளத்தை குறைத்திருக்கலாம். இயக்குனர் உடைய கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் டீன்ஸ் ஒரு சுமாரான படம் தான்.

நிறை:

சிறுவர்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது

படத்தின் முதல் பகுதி சூப்பர்

கதைக்களம் நன்றாக இருக்கிறது

வித்தியாசமான கதைக்களம்

பின்னணி இசை ஓகே

குறை:

சில காட்சிகள் பார்வையாளர்களை சோதித்து இருக்கிறது

பாடல்கள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை

கிராபிக்ஸ் காட்சிகளில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்

மொத்தத்தில் டீன்ஸ் - சுவாரசியம் குறைவு

Tamil Behind Talkies AMP · Quick view
View full