மூணு வருசமா ஒடம்பு சரியில்ல, பசங்க இப்படி சொல்லிட்டாங்க, இப்போ அந்த உதவிய நம்பி தான் இருக்கேன் - வறுமையின் பிடியில் பருத்திவீரன் பாட்டி.

By Rajkumar · 3/5/2022

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பாக ஊரோரம் புளியமரம் பாடல் இந்த படத்தில் ஒரு ஹைலைட் பாடலாக அமைந்திருந்தது.

தமிழ் சினிமாவில் மண் சார்ந்த படங்கள் உருவாகும்போதெல்லாம் அதில் நிச்சயம் நாட்டுபுறக்கலைஞர்களின் பாடல்கள் இல்லாமல் உருவாக்கவே முடியாது.அப்படி தமிழ் சினிமா நிறைய நாட்டுப்புறக்கலைஞர்களை வெளிக்காட்டி இருந்தாலும் ,அவர்களை தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள தவறிவிடுகிறது. ஊரோரம் புளியமரம்..' என்ற பருத்திவீடன் பாடலில் கதாநாயகன் கார்த்திக்கு இணையாக கவனிக்கப்பட்டவர் அந்த பாடலை பாடிய நாட்டுப்புறப்பாடகி காரியாபட்டி லட்சுமி அம்மாள்.

ஒழுகும் வீடு :

கனீரி குரலும் ஓங்குதாங்கான உடலும் தான் அவரது அடையாளம். மேலும், இவர் கலைமாமணி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமையின் பிடியில் சிக்கிய லட்சுமி அம்மாள் மருத்துவ தேவைக்கு கூட வழையின்றி தவித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல இணையதள பக்கத்தில் லட்சுமி அம்மாள் பாட்டி குறித்து செய்தி ஒன்று வெளியானது. அதில் லட்சுமி அம்மாள் பாட்டி ஒழுகும் வீட்டில் பெற்ற விருதுகளை கூட வைக்க இடமில்லாமல் அன்றாட சாப்பாடுக்கே வழி இல்லாமல் வறுமையில் வாடுவதாக செய்திகள் வெளியானது.

கார்த்தி செய்த உதவி :

இதை அறிந்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் மூலமாக லட்சுமி அம்மாள் பாட்டிக்கு 10,000 ரூபாய் ரொக்கப் பணத்தை அளித்திருக்கிறார்.மேலும் அவருடைய மருத்துவச் செலவிற்கு மாதம் தோறும் தொடர்ந்து உதவுவதாகவும் நடிகர் கார்த்தி கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல யூடுயூப் தொலைக்காட்சி ஒன்று இவரை நேரில் சந்தித்து பேட்டி கண்டுள்ளது.

உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பிரச்சனை :

அதில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் கலைமாமனி விருது பெற்ற சந்தோசத்தில் இருந்த லட்சுமி அம்மாளுக்கு தற்போது நிரந்தர வருமானம் என்பது இல்லை. ஏறகனவெ உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில்,கச்சேரிகளுக்கு திரும்ப சென்று உடல்நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மகன்கள் சொல்வதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார். மூணு வருசத்துக்கு முன்ன உடம்பு சரியில்லாம போச்சு, சினிமாவுல் கார்த்தி தம்பி மட்டும் தான் உதவி பண்ணுச்சு என சொல்லு லட்சுமி அம்மாளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=Ee_xUZF5B7I&t=64s

உதவித்தொகை மூலம் வாழ்க்கை :

அம்பது ஆண்டுகளுக்கு முன்னரே கலப்பு திருமணம் செய்து கொண்ட லட்சுமி அம்மா, தான் பாடிய பாடல்களை கேட்டே தனது கணவர் விரும்பியதாக, தனது காதல் கதை பற்றியும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை மூலம் மட்டுமே தனது வாழ்வாதாரம் இருப்பதாக சொல்லும் அவர், சினிமாவில் வாய்ப்புகளுக்கு காத்திருப்பதாக சொல்கிறார். மேலும், யூடிய்ய்ப் சேனலில் பேசியபோது, நடிகர் கார்த்தி செய்த உதவ்வியும். கார்த்தியின் இரண்டாவது குழந்தைக்காக தாலாட்டு பாடல் பாடியது அடுத்த பகுதியில் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full