கல்லூரி படிக்கும் போது அஜித்துக்கு அனுப்பிய லவ் லெட்டர், வீரம் படத்தின் போது அஜித் சொன்ன விஷயம் - 2kஅம்மா சுஜாதாவின் சுவாரசிய பக்கங்கள்.

By Arun · 11/3/2023

பருத்திவீரன் நடிகை சுஜாதா அவர்களைப் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்கள் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜாதா. இவர் பெரும்பாலும் படங்களில் அம்மா, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படத்தில் அவரைப் பற்றி பெரிதாக பேசவில்லை. அதற்குப் பிறகு 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பருத்திவீரன் என்ற படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு திரைத்துறையில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சுஜாதா திரைப்பயணம்:

அதுமட்டும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், உதயநிதி என பல நடிகர்களின் படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய மதுரை மண்ணின் மொழி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது இவர் நூறு படங்களை நெருங்கி நடித்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரையிலும் கால் தடம் பதித்திருக்கிறார்.

சுஜாதா நடிக்கும் சீரியல்:

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான மகாநதி என்ற தொடரில் கதாநாயகியின் அம்மாவாக சுஜாதா நடித்து வருகிறார். 4 பெண் பிள்ளைகளுக்கு அம்மாவாகவும், கணவரை இழந்து பெண் பிள்ளைகளை வைத்து போராடும் கதாபாத்திரத்தில் சுஜாதா நடிக்கிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை சுஜாதா பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

நடிகை சுஜாதாவை குறித்த தகவல்:

இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன் குழந்தைகளுடன் இருப்பது தான் ரொம்ப பிடிக்குமாம். இவருக்கு ஸ்ருதி பிரியா, சுபிக்ஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது இவர்கள் வளர்ந்து பெரிதாகி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் சுஜாதா சிவகுமார் என்று தான் அழைக்கின்றனர். ஆனால், இவரது கணவர் பாலகிருஷ்ணன். அரசு பள்ளியில் இருக்கிறார். இவருடைய தந்தை பெயர் பாஸ்கர். இருந்தாலும், இவருக்கு சிவகுமார் என்ற பெயர் எப்படி வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.

சுஜாதாவின் பிறந்தநாள்:

மேலும், இளம் வயதில் இவர் அஜித்துக்கு காதல் கடிதம் எழுதி இருக்கிறார். இதனை வீரம் படப்பிடிப்பின் பொது அஜித்திடம் சொல்ல அதற்கு அவரும் 'அப்படியா' என்று சிறிது இருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்காக விகடன் விருது, விஜய் டிவி விருது, ஃபிலிம் ஃபார் விருது, கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் நடிக்காமல் இருப்பது தான் இவருக்கு ஒரு குறையாகவே இருக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும், இவருடைய ஆசையே முழு நீள காமெடி படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் இன்று இவருடைய பிறந்த நாளில் அவருடைய ஆசைகளும், கனவுகளும் நிறைவேற ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full