அஜித் பாட்டு, காருக்குள் ஆட்டம். ஊரடங்கை மீறி பிறந்தநாளை கொண்டாடினாரா பார்வதி. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 11/4/2020

கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நாடே திண்டாடி வருகிறது. மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 6761 பேர் பாதிக்கப்பட்டும், 206 பேர் பலியாகியும் உள்ளனர். நாளுக்கு நாள் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

https://twitter.com/ajithFC/status/1247773020464148480

மேலும், நாடே கதிகலங்கி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் இந்த நிலையில் சில பேர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளியில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள், காவல்துறை, அரசாங்கம், சுகாதாரத்துறை என பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றார்கள். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளியில் சில பேர் ஊர் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் மற்றும் முரளிக்கு இப்படி ஒரு சொந்தமா ?

அந்த வகையில் தற்போது நடிகை பார்வதி மேனன் செய்த செயல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை பார்வதி மேனன் அவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி தன் நண்பர்களுடன் காரில் சுற்றி உள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பார்வதி மேனன் அவர்கள் தன்னுடைய 32 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி தன் நண்பர்களுடன் காரில் ஊர் சுற்றி உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இவர் தன் நண்பர்களுடன் காரில் சுற்றும் போது தல அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற அதாரு அதாரு என்ற பாடலுக்கு நடிகை பார்வதி மேனனும் அவருடைய நண்பர்களும் காருக்குள்ளேயே நடனமாடி இருக்கின்றனர்.

https://twitter.com/Esperan28252420/status/1248498291613958146

அந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. நாடே தவித்து கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் சமூக இடைவெளியையும், அரசாங்கம் கூறும் கருத்தையும் பின்பற்றவில்லை. நடிகை பார்வதியின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதுவரை இது குறித்து எந்த ஒரு பதிலும் கூறாமல் அமைதி காத்து வருகிறார் நடிகை பார்வதி மேனன்.

இதையும் பாருங்க : அக்கா நீங்க பப்லியா இருந்த போட்டோ காமிங்க. ரசிகரின் வேண்டுகோளை நிறைவேற்றிய சித்ரா.

தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன். அதனை தொடர்ந்து இவர் மரியான், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் அதிகம் மலையாள மொழி படங்களில் தான் நடித்து உள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full